தமிழ் வ7 ப2 இ1 கவின்மிகு கப்பல் வினா-விடைகள்
இயல் ஒன்று
கவின்மிகு கப்பல்
சொல்லும் பொருளும்
உரு – அழகு
வஙகம் – கப்பல்
போழ – பிளக்க
எல் – பகல்
வங்கூழ் – காற்று
கோடு உயர் – கரை உயர்ந்த
நீகான் – நாவாய் ஓட்டுபவன்
மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ____________.
அ) நிலம் ஆ) நீர் இ) காற்று ஈ) நெருப்பு
விடை: இ) காற்று
2. மக்கள் __________ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
அ) கடலில் ஆ) காற்றில் இ) கழனியில் ஈ) வங்கத்தில்
விடை: ஈ) வங்கத்தில்
3. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது _____________.
அ) காற்று ஆ) நாவாய் இ) கடல் ஈ) மணல்
விடை: இ) கடல்
4. 'பெருங்கடல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.
அ) பெரு + கடல் ஆ) பெருமை + கடல் இ) பெரிய + கடல் ஈ) பெருங் + கடல்
விடை: ஆ) பெருமை + கடல்
5. இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.
அ) இன்றுஆகி ஆ) இன்றிஆகி இ) இன்றாகி ஈ) இன்றாஆகி
விடை: இ) இன்றாகி
6. எதுகை இடம்பெறாத இணை ____________.
அ) இரவு- இயற்கை ஆ) வங்கம் - சங்கம்
இ) உலகு - புலவு ஈ) அசைவு - இசைவு
விடை: அ) இரவு- இயற்கை
பொருத்துக.
1. வங்கம் - கப்பல்
2. நீகான் - நாவாய் ஓட்டுபவன்
3. எல் - பகல்
4. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
குறுவினா
1. நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?
நாவாய் உலகம் புடை பெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்த உடையது என்று அகநானூறு கூறுகிறது.
2. நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?
இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தி, நாவாய் ஓட்டிகளுக்கு உதவுகிறது.
சிறுவினா
1.கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?
உலகம் புடை பெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்த உடையது நாவாய்.
நாவாய், புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரப் பிளந்து கொண்டு செல்லும்.
இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தி, நாவாய் ஓட்டிகளுக்கு உதவுகிறது.
உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.
சிந்தனை வினா
1.தரைவழிப்பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?
தரைவழிப்பயணம் மட்டுமே இதுவரை நான் மேற்கொண்டுள்ளேன்.
கடல் வழிப்பயணம் இன்னும் செல்லாததால், அதை நான் விரும்புகிறேன்.
பரந்த பரப்பு கொண்ட கடலில், காற்றைக் கிழித்துக்கொண்டு கப்பல் செல்லும் அழகையும், நில்லாமல் வீசும் அலைகளையும் , துள்ளி விளையாடும் பலவகை மீன்களையும் காண ஆவலாய் இருப்பதால் கடல்வழிப்பயணத்தை நான் விரும்புகிறேன்.
கூடுதல் வினா- விடைகள்
1. எட்டுத்தொகை நூல்கள் யாவை?
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபொடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு
2. மருதன் இளநாகனார் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
மருதன் இளநாகனார் சங்க காலப் புலவர்களுள் ஒருவர்.
மருதத்திணை பாடுவதில் வல்லவர் ஆதலால், மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.
கலித்தொகையில், மருதத்திணையில் உள்ள 35 பாடல்களையும் இவரே பாடியுள்ளார்.
3. எட்டுத்தொகையின் வேறு பெயர் என்ன?
நெடுந்தொகை
4. அகநானூறில் எத்தனை பாடல்கள் உள்ளன?
அகநானூறில் 400 பாடல்கள் உள்ளன.