தமிழ் வ7 ப2 இ1 கலங்கரை விளக்கம் - வினா-விடைகள்

 

இயல் ஒன்று 

அறிவியல் ஆக்கம்

கலங்கரை விளக்கம்


சொல்லும் பொருளும்

தேடல்           - தூண் 

சென்னி  -  உச்சி

தெகிழி  - தீச்சுடர் 

உரவுநீர்  - பெருநீர்ப்பரப்பு

அழுவம்  - கடல் 

கரையும் - அழைக்கும்

வேயா மாடம்  -  வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வேயாமாடம் எனப்படுவது ______.

 அ) வைக்கோலால் வேயப்படுவது ஆ) சாந்தினால் பூசப்படுவது

 இ) ஓலையால் வேயப்படுவது ஈ) துணியால் மூடப்படுவது

விடை: ஆ) சாந்தினால் பூசப்படுவது


2. உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ______.

அ) காற்று ஆ) வானம் இ) கடல் ஈ) மலை

விடை: இ) கடல்


3. கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன ______.

 அ) மீன்கள் ஆ) மரக்கலங்கள் இ) தூண்கள் ஈ) மாடங்கள்

விடை: ஆ) மரக்கலங்கள்


4. தூண் என்னும் பொருள் தரும் சொல் ______.

 அ ) ஞெகிழி ஆ) சென்னி இ) ஏணி ஈ) மதலை

விடை: ஈ) மதலை


குறுவினா

1. மரக்கலங்களைத் துறைமுகம் நோக்கி அழைப்பது எது?

கடலில துறைமுகம் அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறைமுகம் நோக்கி கலங்கரை விளக்கம் அழைக்கிறது.


2. கலங்கரை விளக்கத்தில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?

கலங்கரை விளக்கத்தில் இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.


சிறுவினா

1. கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.

  • கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்து விடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது.

  • ஏணி கொண்டு ஏற முடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது.

  • திண்மையான சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது.

  • இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கானது, துறைமுகம் அறியாமல், கடலில் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறைமுகம் நோக்கி அழைக்கிறது, என கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.


சிந்தனை வினா

1. கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

  • கப்பல் ஓட்டிகளைத்தவிர, சிறு, சிறு படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, கரை சேர உதவுகிறது.

  • கடல் பயணிகள், கலங்கரை விளக்கத்தைக் கொண்டு வழிகளை அறிய  உதவுகிறது.


கூடுதல் வினா- விடைகள்

1.பெரும்பாணாற்றுப்படையை இயற்றியவர் யார்?

பெரும்பாணாற்றுப்படையை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆவார்.


2. பத்துப்பாட்டு நூல்கள் எவையெவை?

  1. திருமுருகாற்றுப்படை

  2. பொருநராற்றுப்படை

  3. பெரும்பாணாற்றுப்படை

  4. சிறுபாணாற்றுப்படை

  5. முல்லைப்பாட்டு

  6. மதுரைக்காஞ்சி

  7. நெடுநல்வாடை

  8. குறிஞ்ச்சிப்பாட்டு

  9. பட்டினப்பாலை

  10. மலைபடுகடாம்


3. கடியலூர் உருத்திரங் கண்ணனார் பற்றி சிறு குறிப்பு வரைக.

  • கடியலூர் உருத்திரங் கண்ணனார் சங்ககாலப் புலவர் ஆவார்.

  • இவர் வாழ்ந்த ஊர் கடியலூர் ஆகும்.

  • இவர் பெரும்பணாற்றுப் படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.


4. பெரும்பணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?


பெரும்பணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன் ஆவார்.


5. ஆற்றுப்படை இலக்கியம் என்றால் என்ன?


வள்ளலிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றவர்கள் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதற்காகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்