தமிழ் வ7 ப2 இ1 இலக்கியவகைச் சொற்கள் வினா-விடைகள்




இயல் ஒன்று


இலக்கியவகைச் சொற்கள்


மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ________.

அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்

விடை: அ) இயற்சொல்


2. பலபொருள் தரும் ஒருசொல் என்பது ___________.

அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்

விடை: ஆ) திரிசொல்


3. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி ___________.

அ) மலையாளம் ஆ) கன்னடம் இ) சமஸ்கிருதம் ஈ) தெலுங்கு

விடை: இ) சமஸ்கிருதம்


பொருத்துக.

1. இயற்சொல் -சோறு 

2. திரிசொல் - அழுவம் 

3. திசைச்சொல் - பெற்றம்

4. வடசொல் - இரத்தம்


குறுவினா


1. மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?

  • எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும். 

  • மண், பொன் என்பன பெயர் இயற்சொல் ஆகும்.


2. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?

இயற்சொல் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும்.


3. குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?

குங்குமம், கமலம் என்பன தற்சமம் வகை வடசொற்கள்ஆகும். வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர். 


சிறுவினா

1. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

இலக்கிய வகையில் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை இயற்சொல் , திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகும்.


2. திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.

திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படுத்தலாம்.


ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்

வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்.


பல பொருள் குறித்த ஒரு திரிசொல்

இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண் இமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.


3. பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.

வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.


பண்டிகை, கேணி முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கி வருபவையாகும்.

 

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்