தமிழ் வ7 ப2 இ1 தமிழரின் கப்பற்கலை வினா-விடைகள்




இயல் ஒன்று 

தமிழரின் கப்பற்கலை


மதிப்பீடு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ___________.

 அ) கலம் ஆ) வஙகம் இ) நாவாய் ஈ) ஓடம்

விடை: ஈ) ஓடம்


2. தொல்காப்பியம் கடற்பயணத்தை ____________ வழக்கம் என்று கூறுகிறது.

 அ) நன்னீர் ஆ) தண்ணீர் இ) முந்நீர் ஈ) கண்ணீர்

விடை: இ) முந்நீர்


3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி __________.

 அ) சுக்கான் ஆ) நங்கூரம் இ) கண்ணடை ஈ) சமுக்கு

விடை: அ) சுக்கான்


கோடிட்ட இடங்ளை நிரப்புக.

1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் _________ என அழைக்கப்படும்.

விடை: தொகுத்ஹி


2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ___________.

விடை: நங்கூரம்


3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் __________ எனக் குறிப்பிடப்படும்.



விடை: கண்ணடை


பொருத்துக.

1. எரா - அடிமரம் 

2. பருமல் - குறுக்கு மரம்

3. மீகாமன் - கப்பலைச் செலுத்துபவர்

4. காந்த ஊசி - திசைகாட்டும் கருவி

 


தொடர்களில் அமைத்து எழுதுக.

1. நீரோட்டம் 2. காற்றின் திசை 3. வானியல் அறிவு 4. ஏற்றுமதி


1.கடல் நீரோட்டங்களின் திசையைத் தமிழர்கள் தம் பட்டறிவால் நன்கு அறிந்திருந்தனர்.


2.காற்றின் திசை அறிந்து கப்பல்களைச் செலுத்த வேண்டும்.


3.மாலுமிகள் வானியல் அறிவு பெற்றிருந்தனர்.


4.பழங்காலத்தில் ஏற்றுமதி சிறந்த வாணிப வருவாயை ஈட்டியது.


குறுவினா

1. தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து தோண்டப்பட்டதால் அவை தோணி என்று அழைக்கப்பட்டன.


2. கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ) பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?

கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ) பஞ்சு வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர், இது மரப்பலகைகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளைக் குறைக்க உதவியது.


3. கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

கப்பல் பல்வேறு வகையான உறுப்புகளை உடையது. 

எரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை கப்பலின் உறுப்புகளுள் சிலவாகும்.


சிறுவினா

1. சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்க , தமிழர்கள் பயன்படுத்திய

ஊர்திகளின் பெயர்களை எழுதுக.

தமிழர்கள் 

தோணி, 

ஓடம், 

படகு, 

புணை, 

மிதவை, 

தெப்பம் போன்ற ஊர்திகளை, நீர் நிலைகளைக் கடக்க பயன்படுத்தினர்.


2. பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக.

  • காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையை தமிழர்கள் றிந்திருந்தனர்.

  • கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டன்களின் திசை ஆகியவற்றை தங்களின் பட்டறிவால் அறிந்திருந்தனர்.

  • திசை காட்டும் கருவியைப் பயன்படுத்தவும், விண்மீன்களின் நிலையை வைத்து திசையை அறியவும் தமிழர்கள் அறிந்திருந்தனர்.


3. கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?

  • கப்பல்கள் கட்டுவதற்கு உரிய மரங்களைத் தேர்ந்தெடுப்பதில் தமிழர்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். 

  • கப்பல்கள் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு அடையாத மரங்களையே கப்பல் கட்ட பயன்படுத்தினர்.

  • நீர்மட்ட வைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் போன்ற மரங்களைப் பயன்படுத்தினர்.

  • பக்கங்களுக்கு தேக்கு, வெண்தேக்கு போன்ற மரங்களைப் பயன்படுத்தினர்.

  • சுழி உள்ள மரங்களைப் பயன்படுத்தாமல் தவிர்த்தனர்.

  • மரங்களையும், பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்கும்போது அவற்றுக்கு இடையே தேங்காய் நார்(அ) பஞ்சு வைத்து இறுக்கி ஆணிகளை அறைந்தனர்.

  • கப்பலின் அடிப்பகுதியில் சுண்ணாம்பையும், சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து பூசினர், இதனால் கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைத்தன.



சிந்தனை வினா

1. இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன் எனச் சிந்தித்து எழுதுக.

  • வெளி நாடுகளுக்குச் செல்ல மக்கள் கடற்பயணம் மேற்கொள்ளாததற்கு முக்கியக் காரணமாக இருப்பது, கடற்பயணத்திற்கு தேவைப்படும் அதிக கால அளவு ஆகும். 

  • இன்றைய அவசர உலகத்தில் பயணத்திற்காக அதிக காலங்களைச் செலவளிக்க மக்கள் தயாராக இல்லை, எனவே கடற்பயணத்திற்கு பெரிய வரவேற்பு இல்லாமல் உள்ளது.

 

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்