வகுப்பு 7 ப2 பா5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

 


அலகு 5

வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?

அ. ஒற்றுமை 

ஆ. வேறுபாடு

இ. இரண்டும் 

ஈ. எதுவும் இல்லை

விடை: இ. இரண்டும் 


2. ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை

அ. 8.7 மில்லியன் 

ஆ. 8.6 மில்லியன்

இ. 8.5 மில்லியன் 

ஈ. 8.8 மில்லியன்

விடை: அ. 8.7 மில்லியன் 


3. உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு 

அ. வரிசை 

ஆ. பேருலகம்

இ. தொகுதி 

ஈ. குடும்பம்

விடை: ஆ. பேருலகம்


4. ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

அ. அரிஸ்டாட்டில் 

ஆ. லின்னேயஸ்

இ. விட்டேக்கர் 

ஈ. பிளேட்டோ

விடை: இ. விட்டேக்கர் 


5. புறாவின் இருசொற் பெயர் 

அ. ஹோமோ செப்பியன்

ஆ. ராட்டஸ் ராட்டஸ்

இ. மாஞ்சிபெரா இண்டிகா

ஈ. கொலம்பா லிவியா

விடை: ஈ. கொலம்பா லிவியா


II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ____________ 1623 ல் இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார்.

விடை: காஸ்பார்டு பாஹின்


2. சிற்றினம் என்பது ____________ வகைப்பாட்டின் நிலை ஆகும்.

விடை:

3. ____________ பச்சையமற்ற மற்றும் ஒளிச் சேர்க்கை தன்மையற்றது.

விடை: பூஞ்ச்சை


4. வெங்காயத்தின் இரு சொற் பெயர் ____________

விடை: அல்லியம் சட்டைவம்


5. ____________ தந்தை, கரோலஸ் லின்னேயஸ் ஆவர்.

விடை: தற்கால வகைப்பாட்டியலின்


III. சரியா அல்லது தவறா கூறு - தவறான பதிலுக்குச் சரியான பதிலைக் கொடுக்கவும்

1. உயிரினம் உருவாகுதல் மற்றும் பரிணாம முக்கியத்துவத்தை அறிய வகைப்பாட்டியல் உதவுகிறது.

விடை: சரி 


2. மீன்கள் நீரில் வாழும் முதுகெலும்புடையவை ஆகும்.

விடை:சரி


3. 1979 ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்டது.

விடை: தவறு

ஐந்து உலக வகைப்பாட்டு முறை R.H விட்டேக்கர் என்பவரால் 1969 ஆம்

ஆண்டு முன்மொழியப்பட்டது.


4. உண்மையான உட்கரு புரோகேரியாட்டிக் செல்களில் காணப்படுகிறது.

விடை: தவறு.

உண்மையான உட்கரு யுகேரியாட்டிக் செல்களில் காணப்படுகிறது.


5. விலங்கு செல்கள் செல்சுவர் பெற்றவை.

விடை: தவறு.

விலங்கு செல்கள் செல்சுவர் அற்றவை.




IV. பொருத்துக


மொனிரா

பாக்டீரியா

புரோடிஸ்டா

யூக்ளினா

பூஞ்சை

மோல்டுகள்

ப்ளாண்டே

வேம்பு

அனிமேலியா

வண்ணத்துப் பூச்சி


V. கூற்று மற்றும் காரணங்காணல் வினாக்கள்

1. கூற்று : இரு சொல் பெயர் என்பது உலகளாகிய பெயராகும். இது இரு பெயர்களைக் கொண்டது.

காரணம் : கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் முதன்முதலில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

i கூற்று சரி, காரணமும் சரி

ii கூற்று சரி, காரணம் தவறு

iii கூற்று தவறு, காரணம் சரி

iv கூற்று மற்றும் காரணம் தவறு

விடை: ii கூற்று சரி, காரணம் தவறு


2. கூற்று : அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல், தொகுத்தல் ஆகியவை வகைப்பாட்டியலில் அவசியமானவை.

காரணம் : இவை வகைப்பாட்டியலின் அடிப்படைப் படிநிலைகள்.

i. கூற்று சரி, காரணமும் சரி.

ii. கூற்று சரி, காரணம் தவறு.

iii. கூற்று தவறு, காரணம் சரி.

iv. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை: i. கூற்று சரி, காரணமும் சரி.


VI. மிகக் குறுகிய விடையளி

1. வகைப்பாட்டியல் என்றால் என்ன?

உயிரினங்களை அவற்றின் பொதுப்பண்புகளின் அடிப்படையில் தொகுத்தல் உயிரியல் வகைப்பாட்டியல் எனப்படும்.


2. ஐந்துலக வகைப்பாட்டினைப் பட்டியலிடுக

  • மொனிரா

  • புரோடிஸ்டா

  • பூஞ்சைகள்

  • ப்ளாண்டே

  • அனிமேலியா


3. இருபிளவு திறவுகோல் –வரையறு?

உயிரினங்களை அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துதல் ஆகும்.


4. மொனிராவிற்கு இரண்டு உதாரணம் தருக.

  • பாக்டீரியா

  • நீலப்பசும் பாசிகள்

5. இரு சொற்பெயரிடும் முறை என்பது யாது?

இரு சொற்பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு உலக அளவில் பெயரிடும் முறை ஆகும். இந்த முறைப்படி ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரினப் பெயரும், இரண்டாவதாக சிற்றினப் பெயருமாக இரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். 


6. இருசொற்பெயரைக் குறிப்பிடுக.


அ. மனிதன் - ஹோமோசேப்பியன்ஸ்

ஆ. நெல் - ஒரைசா சட்டைவா


7. புரோடிஸ்டா குறித்து இரண்டு குறிப்புகள் எழுதுக.

  • தாவர வகை புரோட்டிஸ்டுகள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிப்பவை. பொதுவாக இவை பாசிகள் என்றழைக்கப்படுகின்றன.

  • விலங்கு வகை புரோட்டிஸ்டுகள் பெரும்பாலும் புரோட்டோசோவான்கள் என்றழைக்கப்படுகின்றன.


VII. குறுகிய விடையளி

1. வகைப்பாட்டின் படிநிலைகளைப் பற்றி எழுதுக.

படிநிலை என்பது வகைப்பாட்டியல் பிரிவுகளை மற்ற உயிரினங்களோடு அவற்றிற்குள்ள தொடர்பினை இறங்குவரிசையில் அமைக்கும் முறையே ஆகும்.

வகைப்பாட்டில் ஏழு முக்கியப் படி நிலைகள் உள்ளன. 

அவையாவன : 

  1. உலகம், 

  2. தொகுதி, 

  3. வகுப்பு, 

  4. வரிசை, 

  5. குடும்பம், 

  6. பேரினம், 

  7. சிற்றினம். 

வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினமாகும்.


2. தாவர உலகம் மற்றும் விலங்கு உலகத்தை வேறுபடுத்துக.



தாவர உலகம்

விலங்கு உலகம்

செல்சுவர் கொண்டவை

செல் சுவர் அற்றவை

பசுங்கணிகங்களுடைய யூகேரியாட்டிக் செல் உடையவை

யூகேரியாடிக் செல் உடைய பல செல் உயிரிகள் ஆகும்

தமக்குத்தேவையான உணவைத் தாமே தயாரிக்கும் (ஒளிச்சேர்க்கை மூலம்)திறன் படைத்தவை

தாமாக உணவு தயாரிக்கும் திறன் அற்றவை. உணவிற்காக மற்ற உயிரினங்களைச் சார்ந்திருக்கும்

பசுங்கணிகங்கள் கொண்டவை

பசுங்கணிகங்கள் அற்றவை


3. ஐந்து உலக வகைப்பாட்டின் இரண்டு நிறைகளை எழுதுக.

  • ஐந்து உலக வகைப்பாடு செல்லின் அமைப்பு, உணவு ஊட்ட முறை மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப நிலையின் பண்புகளைத் தெளிவாக குறிக்கின்றது.

  • வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த உயிரினங்கள் மரபு வழியில் வகைப்படுத்தப்படுவதால், இதுவே மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவீன வகைப்பாட்டு முறை ஆகும


VIII. விரிவான விடையளி

1. ஐந்து உலக வகைப்பாட்டின் வரைபடம் வரைக















2. இருசொற் பெயரிடும் முறை குறிப்பு வரைக.

  • இரு சொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு உலக அளவில் பெயரிடும் முறை ஆகும்.

  • காஸ்பார்டு பாஹின், 1623 ஆம் ஆண்டு உயிரினங்களை இரண்டு சொல் கொண்ட பெயர்களோடு அழைப்பதை அறிமுகப்படுத்தினார் .

  • இதனை 1753 ஆம் ஆண்டு கரோலஸ் லின்னேயஸ் என்பவர் செயல்படுத்தினார். இவரே “நவீன வகைப்பாட்டியலின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.

  • இந்த முறைப்படி ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரினப் பெயரும், இரண்டாவதாக சிற்றினப் பெயருமாக இரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். 

  • ஆங்கிலத்தில் எழுதும் போது பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்திலும், சிற்றினப் பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்திலும் எழுதப்பட வேண்டும்.

உதாரணம் : வெங்காயத்தின் இரு சொல் பெயர் அல்லியம் சட்டைவம். அல்லியம் – பேரினப் பெயர் சட்டைவம் - சிற்றினப் பெயர் ஆகும். 


3. முதுகுநாணற்றவையின் வகைப்பாட்டினை அவற்றின் பொதுப்பண்புகள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் எழுது.


தொகுதி/பிரிவு

பொதுப்பண்புகள்

உதாரணம்

ஒரு செல்உயிரிகள் அல்லது புரோட்டோசோவா

நுண்ணோக்கி மூலம் பார்க்கக் கூடிய ஒரு செல் உயிரி. போலிக் கால்கள், கசையிழை, குறு இழை மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன. இனப்பெருக்கம் பிளவு முறையிலோ அல்லது இணைவு முறையிலோ நடைபெறுகிறது

அமீபா, யூக்ளினா, பாரமீசியம்

குழியுடலிகள் அல்லது சீலென்டிரேட்டா

பல செல் உயிரினங்கள், ஈரடுக்கு உயிரிகள், ஒட்டியோ, நீரில் நீந்தியோ மற்றும் தனித்து அல்லது கூட்டமாகக் காணப்படும். பாலின மற்றும் பாலிலா வகை இனப்பெருக்கத்தை மேற்கொள்கிறது.

ஹைட்ரா கடல் சாமந்தி ஜெல்லி மீன்கள், பவளங்கள்


கணுக்காலிகள் அல்லது ஆர்த்ரோபோடா

உடல் கண்டங்களை உடையது. உடற்பரப்பு தடித்த கைட்டின் ஆன புறச்சட்டகத்தைக் க ொண்டுள்ளது. இணைக் கால்கள் மற்றும் இணையுறுப்புகளால் ஆனது. இவை ஒரு பால் உயிரிகள். இவற்றில் ஆண், பெண் வேறுபாடு உண்டு.

நண்டு, இறால், மரவட்டை, பூச்சிகள், தேள், சிலந்தி


வளைத்தசைப் புழுக்கள் அல்லது அனலிடா

மூவடுக்கு உயிரிகள், உடல் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இருபால் உயிரிகள் (இருபால் மற்றும் ஒற்றைபாலியல்)

மண்புழு, நீரிஸ், அட்டை



IX. உயர்சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

1. சாறுண்ணி, ஒட்டுண்ணி மற்றும் கூட்டுயிரி உணவூட்டம் எந்தப் பேருலகத்தில் காணப்படுகிறது? ஏன்?


  • பூஞ்சைகள் உலகம்

  • பூஞ்சைகள் பெரும்பாலும் பல செல் உயிரிகள் ஆகும்.

  • பூஞ்சைகள் உணவுப்பொருள்களின் மீது நொதியைச் சுரந்து, உறிஞ்சுதல் மூலம் தனக்குத் தேவையான ஊட்டப்பொருள்களை எடுத்துக்கொள்கின்றன.

சாறுண்ணி உணவூட்டம்:

இறந்த மற்றும் அழுகிய உயிரினங்கள் (அ) பொருள்கள் மீது வளரும். எ-கா.அகாரிகஸ்


ஒட்டுண்ணி உணவூட்டம்:

உணவிற்காக மற்ற உயிரிங்களைச் சார்ந்து வாழ்கிறது.

எ-கா.பக்னீசியா


கூட்டுயிரி உணவூட்டம்:

ஒன்றை மற்றொன்று சார்ந்து வாழ்தல்

பூஞ்சைகள் +பாசிகள் → லைக்கன்கள்



X. பின்வரும் படங்களைப் பார்த்து உயிரினங்களின் உலகத்தின் பெயரை எழுதுக.

1. சில உயிரினங்களின் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உயிரினங்கள் எந்த உலகத்தைச் சார்ந்தவை என்பதை அடையாளம் கண்டு எழுதுக.

a) ப்ளான்டே உலகம்

b) புரோடிஸ்டா உலகம்


c) ப்ளான்டே உலகம்


d) அனிமேலியா உலகம்

e)பூஞ்சை உலகம்



2. ப்ளாண்ட்டே மற்றும் அனிமேலியா வேறுபடுத்துக. 


ப்ளாண்ட்டே

அனிமேலியா

பல செல் உயிரினங்கள், யூகேரி யோடிக்.

பல செல் உயிரினங்கள், யூகேரியோட்டிக். 

உட்கரு சவ்வு உண்டு

உட்கரு சவ்வு உண்டு

திசு மற்றும் உறுப்புக்கள் கொண்டவை

திசு, உறுப்புக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் கொண்டவை

தற்சார்பு உணவு ஊட்ட முறை

பிறசார்பு உணவூட்ட முறை

உ-ம்சிறுசெடி, புதர்ச்செடி மற்றும் மரங்கள். 

உ-ம். புழு, பூச்சி,மீன், தவளை, பறவைகள், மனிதன்


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்