வகுப்பு 6 அறிவியல் ப3 பா1 காந்தவியல் பாடப்புத்தக வினா விடைகள்
அலகு 1
காந்தவியல்
மதிப்பீடு
I. பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்
1. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்.
அ. மரக்கட்டை
ஆ. ஊசி
இ. அழிப்பான்
ஈ. காகிதத்துண்டு
விடை: ஆ. ஊசி
2.மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.
அ. இந்தியர்கள்
ஆ. ஐரோப்பியர்கள்
இ. சீனர்கள்
ஈ. எகிப்தியர்கள்
விடை: இ. சீனர்கள்
3. தங்குதடையின்றி தோங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே திசையில்தான் நிற்கும்
அ. வடக்கு-கிழக்கு
ஆ. தெற்கு-மேற்கு
இ. கிழக்கு-மேற்கு
ஈ. வடக்கு-தெற்கு
விடை: ஈ. வடக்கு-தெற்கு
4. காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்
அ. பயன்படுத்தப்படுவதால்
ஆ. பாதுகாப்பாக வைத்திருப்பதால்
இ. சுத்தியால் தட்டுவதால்
ஈ. சுத்தப்படுத்துவதால்
விடை: இ. சுத்தியால் தட்டுவதால்
5. காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளமுடியும்.
அ. வேகத்தை
ஆ. கடந்த தொலைவை
இ. திசையை
ஈ. இயக்கத்தை
விடை: இ. திசையை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. செயற்கைக்காந்தங்கள் _________________ ,______________________ , _____________ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
விடை:
2. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் ______________எனப்படுகின்றன.
விடை: காந்தத்தன்மை உள்ள பொருள்கள்
3. காகிதம் ______________ பொருளல்ல.
விடை: காந்தத்தன்மை உள்ள
4. பழங்கால மாலுமிகள், திசையைக்கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய _____________ கட்டித் தொங்க விட்டிருந்தனர்.
விடை: சட்ட காந்தத்தைக்
5. ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் __________________ துருவங்கள் இருக்கும்
விடை: வடக்கு,தெற்கு என இரு
III சரியா? தவறா? தவறெனில் சரிசெய்து எழுதுக.
1. உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு.
விடை: தவறு
அனைத்து வகை வடிவ காந்தத்திற்கும் இரண்டு துருவங்கள் உண்டு.
2. காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.
விடை: சரி
3. காந்தத்தினை இரும்புத்தூள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.
விடை: தவறு
காந்தத்தினை இரும்புத்தூள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் இரு துருவப்பகுதிகளில் ஒட்டிக்கொள்கின்றன.
4. காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.
விடை:
5. இரப்பர் ஒரு காந்தப் பொருள்.
விடை: தவறு
இரப்பர் ஒரு காந்தத்தன்மையற்ற பொருள்
IV. பொருத்துக
V. பொருத்தமில்லாததை வட்டமிட்டுக் காரணம் கூறுக.
1. இரும்பு ஆணி, குண்டூசி, இரப்பர்குழாய், ஊசி.
விடை: இரப்பர் குழாய்
மற்ற பொருள்கள் அனைத்தும் காந்தத்தன்மையுள்ள பொருள்கள்
2. மின்தூக்கி, தானியங்கிப் படிக்கட்டு, மின்காந்த இரயில், மின்பல்பு.
விடை: மின்பல்பு
3. கவர்தல், விலக்குதல், திசைகாட்டுதல், ஒளியூட்டுதல்.
விடை: ஒளியூட்டுதல்
VI. பின்வரும் படங்களில் இரு சட்டகாந்தங்கள் அருகருகே காட்டப்பட்டுள்ளன. பின்வரும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் என்ன நிகழும் எனக்கூறு.
[ஈர்க்கும், விலக்கும், திரும்பி ஒட்டிக் கொள்ளும்]
விடை:
a) ஈர்க்கும்
b) விலக்கும்
c) ஈர்க்கும்
d) திரும்பி ஒட்டிக் கொள்ளும்
e) விலக்கும்
f) திரும்பி ஒட்டிக் கொள்ளும்
கத்தி
தையல் ஊசி
இரும்பு
ஆணி
கத்தரிக்கோல்
ப்ளேடு
திறவுகோல்
இரப்பர்
ப்ளாஸ்டிக்
நெகிழி
பேப்பர்
தோல்
இறகு
சில்வர்
தங்கம்
VII. நிரப்புக.
VIII. சிறு வினாக்கள்
1. காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.
காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் (S-N, N-S) ஒன்றையொன்று ஈர்க்கின்றன.
ஒத்த துருவங்கள் (N-N, S-S) ஒன்றையொன்று விலக்குகின்றன.
2. பள்ளி ஆய்வுக்கூடத்தில் உள்ள சில காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்திருப்பதாக அவற்றைப் பரிசோதிக்கும் போது தெரியவருகிறது. எந்த காரணங்களால் அவை தமது காந்தத்தன்மையை இழந்திருக்கக்கூடும். மூன்று காரணங்களைக் கூறு.
வெப்பப்படுத்தும் பொழுதோ,
உயரத்திலிருந்து கீழே போடும்பொழுதோ,
சுத்தியால் தட்டும் பொழுதோ
காந்தங்கள் தமது காந்தத்தன்மையை இழந்திருக்கக்கூடும்.
IX. நெடுவினா
1. உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?
ஓர் இரும்பு ஊசியை மேஜையின் மீது வைத்தேன்.
ஒரு சட்டகாந்தத்தின் ஒரு முனையை இரும்பு ஊசியின் ஒரமுனையிலிருந்து மறுமுனை வரை ஒரே திசையில் தேய்த்தேன்.
தேய்க்கும்போது திசையையோ, காந்த முனையையோ மாற்றாமல் தேய்க்க வேண்டும்.
30 அல்லது 40 முறை இதேபோல் செய்தேன்.
பின்னர், இரும்பு ஊசி காந்தமாக மாறி உள்ளதா என்பதைக் கண்டறிய அதன் அருகில் சில குண்டூசிகள் அல்லது இரும்புத்தூள்களைக் கொண்டு சென்ற பொழுது. அவை காந்தமாக்கப்பட்ட இரும்பு ஊசியால் ஈர்க்கப்படுவதைக் கண்டேன்.
இதன் மூலம் இரும்பு ஊசி காந்தமாக்கப்பட்டதை அறியலாம்.
2. மின்காந்தத்தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?
மின்காந்தத்தொடர்வண்டியில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன.
மின்சாரம் பாயும்போது மட்டுமே, இவை காந்தத்தன்மை பெறுகின்றன.
மின்சாரத்தின் திசை மாறும்போது இதன் துருவங்களும் மாறுகின்றன.
தொடர்வண்டியின் அடியிலும், தண்டவாளத்திலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்குவதன் காரணமாக இவை,தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில் அந்தரத்தில் நிலைநிறுத்தப்படுன்றன.
தண்டவாளத்தில் பக்கவாட்டிலும், தொடர்வண்டியின் கீழே பக்கவாட்டிலும் உள்ள காந்தங்களினால் தொடர்வண்டி முன்னோக்கி செலுத்தப்படுகிறது.
மின்னோட்டத்தின் மூலம் இக்காந்தங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இத்தொடர்வண்டியில் சக்கரம் போன்ற அசையும் பொருள்கள் இல்லையென்பதால் உராய்வு விசை கிடையாது.
இவை மணிக்கு 300 கி.மீ முதல் 600 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் உடையவை.
உராய்வு இல்லையென்பதால் இவை செல்லும் போது அதிக சத்தம் கேட்பதில்லை.
குறைந்த மின்சாரமே போதுமானது.
சுற்றுச்சூழலுக்கும் இவை உகந்தது.
X. உயர்சிந்தனை வினாக்களுக்கு பதிலளிக்கவும்
1. உன்னிடம் துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புத்தூளும் தரப்படுகிறது. இதனைக் கொண்டு
அ. காந்தத்தின் துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்?
ஆ. காந்தத்தின் எந்தப் பகுதியில் அதிக அளவு இரும்புத்தூள்கள் ஒட்டிக்
கொள்கின்றன? ஏன்?
விடை:
அ. தடையின்றி தொங்க விடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் வடக்கு-தெற்கு திசையிலேயே ஓய்வு நிலைக்கு வரும்.
எனவே, சட்டகாந்தத்தின் நடுவில் ஒரு நூலைக் கட்டி அதனைத் தொங்கவிடுவதன் மூலம், வடக்கே நோக்கும் முனை காந்தத்தின் வடதுருவம் எனவும், தெற்கே நோக்கும் முனை காந்தத்தின் தென்துருவம் எனவும் கண்டறியலாம்.
ஆ. காந்தத்தின் ஈர்ப்புவிசை காந்தத்தின் இரு முனைகளிலும் அதிகமாக இருக்கிறது. எனவே காந்தத்தின் இருமுனைகளிலும், இரும்புத்தூள்கள் அதிகம் ஒட்டிக்கொள்கின்றன.
2. படம்- ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகியவை இரு சட்டகாந்தங்களைக் குறிக்கின்றன. அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனில், சட்டகாந்தம் ‘ஆ’ வின் துருவங்களைக் கண்டறிந்து குறிக்கவும்.
படம்- ‘அ’ வில் தெற்கு மற்றும் வடக்கு துருவங்கள் குறிக்கப்பட்டுள்ளன. வடதுருவ முனை, மற்றொரு சட்டக்காந்தத்தை ஈர்க்குமென்றால், அது நிச்சயமாக தென் துருவமாக மட்டுமே இருக்க முடியும்.
3. ஒரு கண்ணாடி குவளை / முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள் கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?
நூலினால் கட்டப்பட்ட சட்ட காந்தத்தை கண்ணாடி முகவையின் உள்ளே செலுத்தி, சட்டகாந்தத்தின் கவர்ச்சி விசையால் குண்டூசிகளை, கைகள் ஈரமாகாமல் எடுக்கலாம்.