வகுப்பு 3 ப1 தமிழ் இயல் 3 தனித்திறமை வினா விடைகள்
இயல் மூன்று
1. தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள் _______________.
விடை: தரம்
2. பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் _______________.
விடை: நண்பர்கள்
3. பணி இச்சொல் உணர்த்தும் பொருள் _______________.
விடை: வேலை
4. படைத்தளபதி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________.
விடை: படை + தளபதி
5. எதை + பார்த்தாலும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______________.
விடை: எதைப்பார்த்தாலும்
1. காட்டில் விலங்குகளின் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?
காட்டில் விலங்குகளின் கூட்டம் புலியின் தலைமையில் நடைபெற்றது.
2. புலிராஜா, படைத்தளபதி பொறுப்பை யாருக்குக் கொடுத்தார்?
புலிராஜா, சிங்கக்குட்டிக்கு படைத்தளபதி பொறுப்பைக் கொடுத்தார்.
3. ஆந்தைக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டது?
ஆந்தைக்கு இரவுக்காவல் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
4. கரடி எந்தெந்த விலங்குகள் தகுதியற்றவை எனக்கூறியது?
ஆமை, முயல், கழுதை போன்ற விலங்குகள் தகுதியற்றவை எனக் கரடி கூறியது.
5. இந்தக் கதையின் மூலம் நீ அறிந்து கொள்வது யாது?
யாரையும் குறைவாக எடைபோடக் கூடாது. அவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் காணவேண்டும்.
1. காட்டில் விலங்குகளின் நடந்தது கூட்டம்
விடை: காட்டில் விலங்குகளின் கூட்டம் நடந்தது.
2. இரவுக்காவல் நீங்கள்தாம் அமைச்சர் ஆந்தையாரே
விடை: இரவுக்காவல் அமைச்சர் நீங்கள்தாம் ஆந்தையாரே
3. முயல் ஓடும் வேகமாக அதி
விடை: முயல் அதிவேகமாக ஓடும்.
4.கூடாது யாரையும் பூடக் எடை குறைவாக
விடை: யாரையும் குறைவாக எடை போடக் கூடாது.
தமிழில் உள்ள உயிரெழுத்துகள் மொத்தம் - 12
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ
குறில் அல்லது குற்றெழுத்துகள்
அ, இ, உ, எ, ஒ
இந்த ஐந்து எழுத்துகளும் ஓசையில் குறுகி ஒலிக்கின்றன. எனவே இவற்றிற்குக்
குறில் அல்லது குற்றெழுத்துகள் என்று பெயர்.
நெடில் அல்லது நெட்டெழுத்துகள்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
இந்த ஏழு எழுத்துகளும் ஓசையில் நீண்டு ஒலிக்கின்றன. இவற்றிற்கு நெடில்
அல்லது நெட்டெழுத்துகள் என்று பெயர்.
தமிழில் உள்ள மெய்யெழுத்துகள் மொத்தம் - 18.
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல். வ், ழ், ள், ற், ன்
இவை ஒலிக்கும் தன்மையை வைத்து மூன்று வகைகளாகப் பிரித்துப் பெயரிடுவோம்.
வல்லினம்
க், ச், ட், த், ப், ற் - என்ற எழுத்துகள் வலிய ஓசை உடையவை, எனவே இவற்றுக்கு வல்லினம் என்று பெயர்.
மெல்லினம்
ங் ஞ், ண், ந், ம், ன் - என்ற எழுத்துகள் மெல்லிய ஓசை உடையவை. எனவே இவற்றுக்கு மெல்லினம் என்று பெயர்.
இடையினம்
ய், ர், ல், வ், ழ், ள் - என்ற எழுத்துகள், வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இடைப்பட்ட ஓசை உடையதால் இவற்றுக்கு இடையினம் என்று பெயர்.
ஆய்த எழுத்து அல்லது தனிநிலை
ஃ என்பது ஆய்த எழுத்து அல்லது தனிநிலை எனப்படும்.