வகுப்பு 3 ப1 தமிழ் இயல் 5 மாணவர்கள் நினைத்தால் வினா-விடைகள்
இயல் ஐந்து
1. முயற்சி இச்சொல்லின் பொருள் _____________.
விடை: ஊக்கம்
2. ஆன்றோர் இச்சொல்லின் பொருள் _____________.
விடை: பெரியோர்
3. வைத்திருந்தனர் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது _____________.
விடை: வைத்து + இருந்தனர்
4. வீதியெங்கும் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது _____________.
விடை: வீதி + எங்கும்
5. நெகிழி + அற்ற என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது _____________.
விடை: நெகிழியற்ற
6. பாதிப்பு + அடைகிறது என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது _____________.
விடை: பாதிப்படைகிறது
1. மேரி இனி யாருடன் விளையாடப் போவதாக் கூறினாள்?
மேரி இனி தனது வீட்டுக் கன்றுக்குட்டியுடன் விளையடப் போவதாக் கூறினாள்.
2. பசு எதனால் இறந்தது?
பசு நெகிழியை உட்கொண்டதால் இறந்தது.
3. நெகிழியினால் ஏற்படும் தீமைகள் இரண்டனை எழுதுக.
மட்காத நெகிழிக் குப்பைகளால் சாக்கடைகளில் நீர்த்தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, ஈ மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது.
நெகிழிக் குப்பைகளை எரிப்பதால் ஓசோன் படலம் பாதிப்படைகிறது. இதனால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக நம்மைத் தாக்குகிறது. இதனால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன.
4. நெகிழி விழிப்புணர்வு வாசகம் ஒன்றினை உருவாக்குக.
நெகிழி நெகிழும் !
நிம்மதி அகலும் !!
1. நெகிழியற்ற ................................................. உருவாக்குவோம். (உலகை / உளகை)
விடை: உலகை
2. நெகிழியை ஒழிப்போம் ................................................. காப்போம். (மன்வளம் / மண்வளம்)
விடை: மண்வளம்
3. மேரி ......................................... குதித்து ஓடிவந்தாள். (மகிள்வோடு / மகிழ்வோடு)
விடை: மகிழ்வோடு
4. எறும்பு ................................................. கல்லும் தேயும். (ஊரக் / ஊறக்)
விடை: ஊரக்
5. துணிப்பை என்பது ................................................. (எளிதானது / எலிதானது)
விடை: எளிதானது
ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை.
ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களைக் குறிப்பது பன்மை.