வகுப்பு 3 ப1 தமிழ் இயல் 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் வினா விடைகள்

 

இயல் ஆறு

6

துணிந்தவர் வெற்றி கொள்வர்



சரியான விடையைத் தெரிவு செய்வோமா?


1. வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

 விடை: வகுப்பு + அறை

2. இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள் ____________.

 விடை:  அவமதிப்பு

3. பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் ____________.

 விடை:  சிறிய

4. வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல் ____________.

 விடை:  தோல்வி

5. மண்ணைப்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

 விடை:  மண்ணை + பிளந்து


வினாக்களுக்கு விடையளி


1. மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி என்ன?

அறையின் நடுவில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அந்த அறையினுள் சென்று பெட்டியினைத்தூக்கி வருபவரே வெற்றியாளர் என்பதே 

 ஆசிரியர்  மாணவ, மாணவிகளுக்கு அறிவித்த போட்டியாகும்.

2. மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்காததற்குக் காரணங்கள் யாவை?

  பெட்டி உருவ அளவில் பெரியதாக இருந்ததால், தங்களால் அப்பெட்டியினைத் தூக்க இயலாது எனப் போட்டியில் பல மாணவ,மாணவிகள் பங்கேற்கவில்லை.

3. கவியரசியின் வெற்றிக்குக் காரணம் என்ன?

கவியரசி முயற்சி செய்து பார்ப்போமே என்று எண்ணி,பெட்டியினை நகர்த்தியபோது பெட்டி எளிதாக நகர்ந்தது.தன்னால் முடியும் என்று நம்பி கவியரசி முயன்றதால் வெற்றி பெற்றாள்.


பாடப்பொருளை வரிசைப்படுத்துவோமா?


1. இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர்.

2. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர்.

3. தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள்.

4. ஆசிரியர் ஒரு போட்டியியனை அறிவித்தார்.

5.  அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது

விடை:

1. ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார்.

2.  அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.

3.  இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர்.

4.  தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள்.

5. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர்.


பழத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்கலாமா?


விடைகள்:

  1. ஆசிரியர்

  2. பெயர்

  3. போட்டி

  4. ஆதி

  5. பெட்டி

  6. சிரி

  7. சட்டி

  8. ஆசி

  9. அதிசயம்

  10. அரிசி



பொருத்தமான எதிர்ச்சொல் சாவியைக் கொண்டு பூட்டைத் திறப்போமா?






இணைந்து செய்வோம்


மாணவர்களுக்கு வேண்டிய குணங்களைக் கொண்ட மீன்களுக்கு

மட்டும் வண்ணமிடுக.





செயல் திட்டம்



"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்" என்பது போன்று தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏதேனும் ஐந்து பொன்மொழிகள் மற்றும் பழமொழிகளை எழுதித் தொகுத்து வருக.

  1. நம்பினார் கெடுவதில்லை

  2. உனது குறைகளை நிறைகளாக்கு

  3. முயன்றால் முன்னேறலாம்

  4. அதிகாலையில் எழுந்தால் அகிலமும் வசமாகும்

  5. உன்னால் முடியும்

Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்