வகுப்பு 3 ப1 தமிழ் இயல் 7 சான்றோர் மொழி வினா-விடைகள்

 

இயல் ஏழு

7

சான்றோர் மொழி


சரியான விடையைத் தெரிவு செய்வோமா?


1. உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் ____________.

விடை: சொல்லுதல்

2. ஈதல் என்ற சொல் குறிக்கும் பொருள் ____________.

விடை:  கொடுத்தல்

3. மிக்காரை என்ற சொல்லின் எதிர்ச்சொல் ____________.

விடை:  அறிவிலாதார்

4. இரவாது என்ற சொல் குறிக்கும் பொருள் ____________.

விடை:  பிறரிடம் கேட்டுப் பெறாது

5. சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் ____________.

விடை:  இணைதல்


பொருள்பட எழுதிப் படித்து மகிழ்க


1. என  க்குஇனி ப்புபி டிக்கும்

விடை:  எனக்கு இனிப்பு பிடிக்கும்

2. உழை ப்புஉ யர்வுத ரும்

விடை:  உழைப்பு உயர்வு தரும்

3. மர ம் வள  ர்ப்போ ம்ம ழைபெ றுவோம்

விடை:  மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

4. சுத் தம்சு கம்த ரும்

விடை:  சுத்தம் சுகம் தரும்

5. இனி யதமி ழில்பே சுங்கள்

விடை:  இனிய தமிழில் பேசுங்கள்


நீ எதை விரும்புவாய்? ஏன்? கலந்துரையாடுக

  • நீர் வளம் இன்றியமையாதது.

  • நீர் வீணாவதை, வீணாக்குவதை நான் விரும்பமாட்டேன்.

  • நீரையும், மழைநீரையும் சேமிப்பது மிகவும் அவசியம்.

  • குழாய்களில் நீர் கசிவதை, வீணாவதை எங்காவது காண நேர்ந்தால், குழாயை மூடி நீர் வீணாவதைத் தடுப்பேன்.


செயல் திட்டம்

‘கல்வி’ என்ற அதிகாரத்தில் இருந்து ஐந்து திருக்குறள் படித்து எழுதி வருக.


  1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

  1. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.

  1. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

  1. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்