வகுப்பு 3 ப1 தமிழ் இயல் 8 நூலகம் வினா-விடைகள்
இயல் எட்டு
1. நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்
விடை: புத்தகம்
2. அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்
விடை: அறிவில் சிறந்தவர்
3. தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
விடை: தேன் + அருவி
4. புத்துணர்ச்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
விடை: புதுமை + உணர்ச்சி
5. அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல்
விடை: புறம்
6. தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
விடை: தேனிருக்கும்
1. நூலகத்தின் வேறு பெயர்கள் யாவை?
நூல் நிலையம், புத்தகச்சாலை என்பன நூலகத்தின் வேறு பெயர்கள் ஆகும்.
2. நூலகத்தின் பயன்கள் யாவை?
நமக்குத் தேவையான அல்லது பிடித்த நூல்களை எடுத்துப் படிக்கலாம். இதனால்,
நம் அறிவு வளர்கிறது.
நம்முடைய நேரம் பயனுள்ள முறையில் அமைகிறது.
வேலைவாய்ப்புத் தொடர்பான நூல்களைப் படிப்பதால் நல்ல
வேலையில் சேரவும் முடிகிறது.
மூளை புத்துணர்ச்சி பெறுகிறது.
தன்னம்பிக்கை ஏற்படுகிறது.
3. நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன?
நூலகத்தில்,
குழந்தைகளுக்கான பிரிவு தனியாகவே உள்ளது.
நூலகத்தில் உள்ள ” வாசகர் வட்டம்” மூலமாக “நூலக தினத்தன்று” குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நூலகங்களிலும் நடத்தப்படுகின்றன.
போட்டிகளில் கலந்து கொள்வோருக்காகவும், போட்டித் தேர்வினை எழுதுவோருக்காகவும் தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
4. நீ நூலகத்திற்குச் சென்று வந்ததைப் பற்றி எழுதுக.
நான் எங்கள் ஊரில் உள்ள ஊர்ப்புற நூலகத்திற்குச் சென்றேன். அங்கு ராணி காமிக்ஸ்,அம்புலிமாமா, பூந்தளிர், சிறுவர் மலர், தங்கமலர் போன்ற நூல்களைப் படித்தேன். நூலகத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். பல ஆண்டுகளுக்கும் முன் வந்த சித்திரக் கதைகளும் பைண்டிங்க் செய்யப்பட்டு நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்ததைப் பார்க்க மிகவும் அழகாக இருந்தது. இனி எனது அலமாரியில் நான் புத்தகங்களை அழகாக அடுக்கி வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்தேன்.
எ. கா: வரிக்குதிரை - வரி, குதிரை, குதி, திரை, வரை
திரு
வேலி
நெல்
நெலி
வேதி
பனி
புயல்
பல்
புல்
பல்பு
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள் பூமலர். விளையாடுவதற்காகத் தன் தோழி மாலதியின் வீட்டிற்குச் சென்றாள் வழியில் இரண்டு சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர். பூமலர் அவர்களிடம், ஓணானை அடிக்காதீர்கள், உங்களை அடித்தால் உங்களுக்கு வலிக்கும் அல்லவா? அது போல அதற்கும் வலிக்கும். எனவே உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்றாள். சற்றுச் சிந்தித்த அச்சிறுவர்கள் கற்களைக் கீழே போட்டுவிட்டுத் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
1. பூமலர் யார் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்?
பூமலர், மாலதியின் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்.
2. சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?
சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர்.
3. உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறியவர் யார்?
உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறியவர், பூமலர்.
4. இவ்வுரைப்பகுதியிலிருந்து நீ அறிந்து கொண்டது என்ன?
உயிரினங்களைத் துன்புறுத்தக்கூடாது என்று இந்த உரைப்பகுதியிலிருந்து அறிந்து கொண்டேன்.
இல்லாமல் சமைக்க முடியாது.
இல்லாமல் செடி வளராது.
இல்லாமல் வண்டி ஓடாது.
1. அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று உனக்கு விருப்பமான சிறுவர் இதழ்களைப் படித்து அதில் உனக்குப் பிடித்த இதழ்களின் பெயர்களை எழுதி வருக.
பூந்தளிர்
அம்புலிமாமா
ராணி காமிக்ஸ்
முத்து காமிக்ஸ்
பால்ராமா
சுட்டி விகடன்
சிறுவர்மணி