வகுப்பு 3 ப1 தமிழ் இயல்9 மாட்டு வண்டியிலே வினா விடைகள்
இயல் ஒன்பது
1. தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது.
விடை: தண்மை + நீர்
2. மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல்
விடை: கீழே
3. வயல் + வெளிகள் - இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
விடை: வயல்வெளிகள்
4. கதை + என்ன இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
விடை: கதையென்ன
5. வெயில் இச்சொல்லின் எதிர்ச்சொல்
விடை: நிழல்
1. எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன?......................................................
விடை: குடை
2. அடிமலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ? ...........................................................
விடை: வாழைப்பூ
3. கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன?
........................................................
விடை: புத்தகம்
4. அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன? .................................................................
விடை: கோலம்
5. என்னோடு இருக்கும் சிறுமணி, எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும் அது என்ன? ...........................................................
விடை: கண்மணி (கருவிழி)
6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது. அது என்ன? ................................................
விடை: பட்டாசு
7. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன? ........................................
விடை: ணெனெ நெற்கதிர்
8. ஒளி கொடுக்கும் விளக்கல்ல, வெப்பம் தரும் நெருப்பல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல அது என்ன? ........................................................
விடை: சூரியன்
வீட்டில் உள்ள தாத்தா பாட்டியிடம் மூன்று புதிர்களைக் கேட்டறிந்து குறிப்பேட்டில் எழுதி வருக.
1. அடித்தாலும் உதைத்தாலும் அழமாட்டான். அவன் யார்?
விடை: பந்து
2. இதயம் போல் துடித்திருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
விடை: கடிகாரம்
3. உடல்-சிவப்பு, வாய்-அகலம், உணவு-காகிதம், நான் யார்?
விடை: தபால் பெட்டி