வகுப்பு 3 ப1 தமிழ் இயல் ஒன்று தமிழ் அமுது
இயல் ஒன்று
1. நித்திலம் இச்சொல்லின் பொருள்
விடை:முத்து
2. செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
விடை: செம்மை + தமிழ்
3. உன்னை + தவிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
விடை: உன்னைத்தவிர
எ.கா.
தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் இரண்டு பாடல்கள் எழுதி வருக.
1. அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்*
-நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
2. தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
-பாரதிதாசன்