வகுப்பு 3 ப1 தமிழ் இயல் இரண்டு கண்ணன் செய்த உதவி
இயல் இரண்டு
1. கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்.
விடை: சூரியன்
2. மகிழ்ச்சியடைந்தான் இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது.
விடை: மகிழ்ச்சி + அடைந்தான்
3. ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது.
விடை: ஒலி + எழுப்பி
1. ஒலி : சத்தம்
2. ஒளி : வெளிச்சம்
3. பள்ளி : கல்வி பயிலும் இடம்
4. பல்லி : ஊர்வன வகுப்பைச் சார்ந்த உயிரினம்
5. காலை : விடியல் பொழுது
6. காளை : ஆண் மாடு
1. ஒட்டகச்சிவிங்கி மிகவும் உயரமானது.
2. அதன் கருத்து நீளமாக இருக்கும்
3. ஒட்டகச்சிவிங்கிக்கு குரல்நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு கத்த முடியாது.
4. ஒரு சிங்கத்தையே காலால் தாக்கிக் கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது.
5. ஒட்டச்சிவிங்கி இலைதழைகளைத் தின்னும்.
1. கண்ணன் எங்கு புறப்பட்டான்?
கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான்.
2. பள்ளிக்கு செல்லும் வழியில் கண்ணன் யாரைப் பார்த்தான்?
பள்ளிக்குச் செல்லும் வழியில் கண்ணன் ஒரு பெரியவரைப் பார்த்தான்.
3. பேருந்து எதில் மோதியது?
பேருந்து பக்கத்தில் இருந்த மரத்தில் மோதியது.
4. பெரியவர் எந்த எண்ணிற்கு செல்பேசியில் பேசினார்?
பெரியவர் 108 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.
5. ஆசிரியர் கண்ணனை எதற்காகப் பாராட்டினார்?
கண்ணன் விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களுக்கு உதவினான்.
அதனால் ஆசிரியர் பாராட்டினார்.
வாத்தில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை
உருவாக்குக.
1. நரி
2. சிகை
3. சிரிப்பு
4. நடிப்பு
5. திகைப்பு
6. நகைப்பு