வகுப்பு 8 ப1 ப அ1 ஐரோப்பியர்களின் வருகை வினா-விடைகள்

 

8 சமூக அறிவியல்

அலகு 1

ஐரோப்பியர்களின் வருகை


மதிப்பீடு

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர்

யார்?

அ) வாஸ்கோடகாமா

ஆ) பார்த்தலோமியோ டயஸ்

இ) அல்போன்சோ-டி-அல்புகர்க்

ஈ) அல்மெய்டா

விடை: இ) அல்போன்சோ-டி-அல்புகர்க்


2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக்

கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

அ) நெதர்லாந்து (டச்சு) ஆ) போர்ச்சுகல் இ) பிரான்ஸ் ஈ) பிரிட்டன்

விடை: ஆ) போர்ச்சுகல்


3. 1453ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

அ) பிரான்ஸ் ஆ) துருக்கி இ) நெதர்லாந்து (டச்சு) ஈ) பிரிட்டன்

விடை: ஆ) துருக்கி


4. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் ____________​​​​ நாட்டைச் சேர்ந்தவர்

அ) போர்ச்சுக்கல் ஆ) ஸ்பெயின் இ) இங்கிலாந்து ஈ) பிரான்ஸ்

விடை: இ) இங்கிலாந்து

5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

அ) வில்லியம் கோட்டை

ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

இ) ஆக்ரா கோட்டை

ஈ) டேவிட் கோட்டை

விடை: ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை


6. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு

வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர் 

அ) ஆங்கிலேயர்கள்

ஆ) பிரெஞ்சுக்காரர்கள்

இ) டேனியர்கள்

ஈ) போர்ச்சுக்கீசியர்கள்

விடை: ஆ) பிரெஞ்சுக்காரர்கள்


7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி ____________ வர்த்தக மையமாக இருந்தது

அ) போர்ச்சுக்கீசியர்கள்

ஆ) ஆங்கிலேயர்கள்

இ) பிரெஞ்சுக்காரர்கள்

ஈ) டேனியர்கள்

விடை: ஈ) டேனியர்கள்


II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) ____________  அமைந்துள்ளது.

விடை: புது டில்லியில்

2. போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் ____________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.

விடை: மன்னன் இரண்டாம் ஜான்

3. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556இல் ____________  அரசால் கோவாவில்

நிறுவப்பட்டது.

விடை: போர்ச்சுகீசிய

4. முகலாயப் பேரரசர் ____________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம்

செய்ய அனுமதி அளித்தார்.

விடை: ஜஹாங்கீர்

5. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ____________ என்பவரால் நிறுவப்பட்டது.

விடை: கால்பர்ட்

6. ____________என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை

உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.

விடை: நான்காம் கிறிஸ்டியன்


III பொருத்துக

1. டச்சுக்காரர்கள் - 1602

2. ஆங்கிலேயர்கள் - 1600

3. டேனியர்கள் - 1616

4. பிரெஞ்சுக்காரர்கள் - 1664


IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

1. சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

விடை: சரி

2. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

விடை: சரி

3. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

விடை: தவறு

4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள்

என்றழைக்கப்படுகிறது.

விடை: சரி


V 1) பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை () செய்க

1. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து

கோவாவிற்கு மாற்றினார்.

2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.

3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.

4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.

அ) 1 மற்றும் 2 சரி ஆ) 2 மற்றும் 4 சரி

இ) 3 மட்டும் சரி ஈ) 1, 2 மற்றும் 4 சரி

விடை: ஈ) 1, 2 மற்றும் 4 சரி


2) தவறான இணையைக் கண்டறிக

அ) பிரான்சிஸ் டே - டென்மார்க்

ஆ) பெட்ரோ காப்ரல் - போர்ச்சுகல்

இ) கேப்டன் ஹாக்கின்ஸ் - இங்கிலாந்து

ஈ) கால்பர்ட் - பிரான்ஸ்

விடை: அ) பிரான்சிஸ் டே - டென்மார்க்


VI பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

1. ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறுகுறிப்பு தருக.

  • வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது. 

  • கடந்த கால நிர்வாக முறைகளைப் புரிந்து கொள்வதற்கான அனைத்துத் தகவல்களுடன் தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கும் ஒரு வழிகாட்டியாக ஆவணக்காப்பகம் விளங்குகிறது.


2. நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

நிர்வாக வரலாற்றை அறிய ஒரு சிறந்த ஆதாரமாக நாணயங்கள் திகழ்கின்றன. நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி. 1862ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.


3. இளவரசர் ஹென்றி “மாலுமி ஹென்றி” என ஏன் அழைக்கப்படுகிறார்?

இளவரசர் ஹென்றி உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார், எனவே இவர் மாலுமி ஹென்றி என அழைக்கப்படுகிறார்.


4. இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவபபட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயர்களை எழுதுக.

பழவேற்காடு, சூரத், சின்சுரா, காசிம்பஜார், பாட்னா, நாகப்பட்டினம், பாலசோர் மற்றும் கொச்சின் போன்ற இடங்கள் டச்சுக்காரர்களது முக்கிய வர்த்தக மையங்கள் இருந்தன.


5. இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.


  • மெட்ராஸ்

  • பம்பாய்

  • மசூலிப்பட்டினம்

  • சூரத்

  • ஆக்ரா

  • அகமதாபாத்

  • புரோத் 

போன்ற இடங்கள் ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களாக இருந்தன.


VII விரிவான விடையளி

1. நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிபபிடுக.

☀நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக - பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை பற்றி அறிய நமக்கு உதவுகின்றன. 

☀தொடக்க காலத்திலிருந்தே போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டேனியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய அலுவலக செயல்பாடுகளை தங்களது அரசாங்கப் பதிவேடுகளில் பதிவு செய்துள்ளனர். 

☀பராமரிக்கப்பட்ட அவர்களது பதிவுகள் இந்தியாவில் அவர்களது தொடர்பு பற்றி அறிய உதவும் மதிப்பு மிக்க ஆதாரங்களாக உள்ளன. 

☀லிஸ்பன், கோவா, பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஆவணக் காப்பகங்கள் விலை மதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகமாகும்.


2. போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

☀போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார். 

☀வாஸ்கோடகாமா  இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு கி.பி.(பொ.ஆ.) 1498இல் கள்ளிக்கோட்டையை அடைந்தார். 

☀வாஸ்கோடகாமா 1501இல் கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார்.

☀பின்னர் கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையத்தை நிறுவினார். 


3. ஆங்கிலேயர்கள், எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

  • இங்கிலாந்து இராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு 1600 டிசம்பர் 31 அன்று ஒரு அனுமதிப் பட்டயம் வழங்கினார்.

  • பேரரசர் ஜஹாங்கீர், 1613இல் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க அனுமதித்தார். 

  • ஆரம்பத்தில் இது ஆங்கிலேயரின் தலைமையகமாக இருந்தது. 

  • 1615இல் ஜஹாங்கீர் அவைக்கு இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் அவர்களால் சர் தாமஸ் ரோ அனுப்பிவைக்கப்பட்டார்.

  •  வணிகம் செய்யும் உரிமையைப் பெற்ற சர் தாமஸ் ரோ புறப்படும் முன் ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினார

  • ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில் 1611இல் நிறுவினர்.

  • 1690ஆம் ஆண்டு சுதாநுதி என்ற இடத்தில் ஜாப் சார்னாக் என்பவரால் ஒரு வர்த்தகமையம் நிறுவப்பட்டது.

Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்