வகுப்பு 8 ப1 சஅ பு 2 வானிலை மற்றும் காலநிலை வினா-விடைகள்

 

அலகு -2

 வானிலை மற்றும் காலநிலை



மதிப்பீடு

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. 1. புவியின் வளிமண்டலம் __________ நைட்ரஜன் மற்றும் __________ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.

அ) 78% மற்றும் 21%

ஆ) 22% மற்றும் 1%

இ) 21% மற்றும் 0.97%

ஈ) 10 மற்றும் 20%

விடை: அ) 78% மற்றும் 21%

2. __________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

அ) புவி ஆ) வளிமண்டலம் இ) காலநிலை ஈ) சூரியன்

விடை: இ) காலநிலை

3. புவி பெறும் ஆற்றல்

அ) நீரோட்டம்

ஆ) மின்காந்த அலைகள்

இ) அலைகள்

ஈ) வெப்பம்

விடை: ஈ) வெப்பம்

4. கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.

அ) சமவெப்பக்கோடு

ஆ) சம சூரிய வெளிச்சக் கோடு

இ) சம காற்றழுத்தக் கோடு

ஈ) சம மழையளவுக் கோடு

விடை: ஈ) சம மழையளவுக் கோடு

5. __________என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.

அ) காற்றுமானி ஆ)அழுத்த மானி

இ) ஈரநிலை மானி ஈ) வெப்ப மானி

விடை: இ) ஈரநிலை மானி

II கோடிட்ட இடங்களை நிரப்புக 

1. __________என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.

விடை: வானிலை

2. வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு __________.

விடை: வளியியல்

3. புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் __________.

விடை: கிரீன்லாந்து மலைத்தொடர்

4. காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி

அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் __________.

விடை: ஒப்பு ஈரப்பதம்

5. அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம்  __________ மற்றும் __________ஆகியவை அளக்கப்படுகின்றன.

விடை: காற்றின் வேகம், காற்றின் திசை

6. சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு __________.

விடை: சமவெப்பக்கோடு

III பொருத்துக


காலநிலை

நீண்ட நாளைய மாற்றங்கள்

ஐசோநிப்

சம அளவுள்ள பனிபொழிவு

ஈரநிலைமானி

ஈரப்பதம்

ரேடார்

புயலின் அமைவிடத்தையும் அதுநகரும் திசையையும் அறிந்து கொள்வது

குறைந்த அழுத்தம்

(தாழ்வு அழுத்த மண்டலம்)

சூறாவளி


IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

1. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்.

விடை: சரி

2. வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்.

விடை: தவறு

3. சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர்.

விடை: சரி

4. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்த மானி.

விடை: தவறு


V சுருக்கமாக விடையளி

1. காலநிலை – வரையறு

காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும். இது வளி மண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும். 


2. “வெயிற் காய்வு” என்றால் என்ன?

ஒரு இடத்தில் கிடைக்கும் சூரியக் கதிர்வீச்சின் அளவு வெயிற்காய்வு எனப்படும்.


3. “வளிமண்டலக் காற்றழுத்தம்” என்றால் என்ன?

புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள உள்ள காற்றின் எடையே வளிமண்டல அழுத்தம் அல்லது காற்றழுத்தம் எனப்படும். 


4. சிறு குறிப்பு வரைக: கோள் காற்று / நிரந்தரக்காற்று

ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர். எ.கா. வியாபாரக் காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று

5. சம அளவுக் கோடுகள் - “ஐசோலைன்ஸ்” என்றால் என்ன?

சம அளவுக் கோடு என்பது சம அளவுள்ள இடங்களை இணைப்பதாகும். இக்கோடுகள் வானிலைக் கூறுகளின் அடிப்படையைக் கொண்டு அளவுக்கோடுகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. நிலவரைபடங்களில் வானிலைக் கூறுகளின் பரவலைச் சம அளவுக் கோட்டு வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகிறது.


VI வேறுபடுத்துக

1. காலநிலை மற்றும் வானிலை


காலநிலை

வானிலை

வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம், வெப்பம், மேகமூட்டம், காற்றின்திசை, காற்றழுத்தம், ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் பிறகூறுகளின் தன்மைகளை குறிப்பதாகும். 

காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும். 

வானிலை குறுகிய காலமான ஒரு நாளோ, ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ நடக்கக்கூடிய நிகழ்வைக் குறிப்பதாகும். 

இது வளி மண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும். 


2. முழுமையான ஈரப்பதம் மற்றும் ஒப்பு ஈரப்பதம்


முழுமையான ஈரப்பதம்

ஒப்பு ஈரப்பதம்

ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் காற்றில் உள்ள நீராவியின் அளவு முழுமையான ஈரப்பதம் என அழைக்கப்படுகிறது. இது வளிமண்டலத்தின் தொகுதியில் 0 - 5% வரை இருக்கும

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் எவ்வளவு நீராவி இருக்க முடியுமோ அந்த அளவிற்கும், அதேசமயம் அக்காற்றில் தற்போது எவ்வளவு நீராவி உள்ளதோ அந்த அளவிற்கும் உள்ள விகிதம் ஒப்பு ஈரப்பதம் எனப்படும். இது சராசரி சதவிகித முறையில் காணப்படுகிறது.


3. கோள் காற்று மற்றும் பருவகாலக் காற்றுகள்

கோள் காற்று

பருவகாலக் காற்றுகள்

ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர். 

பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும் காற்று பருவகாலக் காற்று எனப்படும். இக்காற்றுகள் கோடைக்காலத்தில் கடலிலிருந்து நிலத்தை நோக்கியும், குளிர்காலத்தில் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்.


VII. காரணம் கூறுக

1. காலநிலையும் வானிலையும் வெவ்வேறு இடங்களில் மாறுபடுகின்றன.

சூரியக்கதிர்களின் படுகோணம், சூரிய ஒளிப்படும் நேரம், உயரம், நிலம் மற்றும் நீர் பரவல், அமைவிடம், மலைத்தொடர்களின் திசை அமைவு, காற்றழுத்தம், காற்று மற்றும் கடல் நீரோட்டம் போன்றவை ஓரிடத்தின் காலநிலையையும், வானிலையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். எனவே காலநிலையையும், வானிலையையும் ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடுகின்றன.


2. உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.


வளிமண்டல அழுத்தம் குறையக் குறைய வெப்ப நிலையும் குறைந்து கொண்டே வரும். காற்று மூலக்கூறுகளின் அளவு குறைந்து கொண்டே வருவது,வளி மண்டல அழுத்தக் குறைவு எனப்படுகிறது.

வெப்பநிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு 6.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது. இதனை வெப்ப குறைவு வீதம் என்று அழைப்பர். 


3. மலை ஏறுபவர்கள் உயர்ந்த சிகரங்களுக்குச் செல்லும்போது ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.

மிக உயரமான இடங்களில் காற்றில் ஆக்ஸிஜனின் அளவும் காற்றின் அழுத்தமும் மிகவும் குறைவாக உள்ளது. மலையேறுபவர்கள் உயர்ந்த சிகரங்களில் ஏறும்பொழுது ஆக்ஸிஜனை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டு அதிக உயரங்களுக்குத் தம்மை பழக்கப் படுத்திக் கொள்கின்றனர்.


VIII விரிவான விடையளி

1. வெப்ப நிலை எவ்வாறு அளவிடப்படுகிறது?

வெப்ப நிலை என்பது காற்றில் உள்ள வெப்பத்தின் அளவை குறிப்பதாகும். வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட கனஅளவு காற்றில் குறிப்பிட்ட நேரத்தில் அளவிடப்படுகிறது. 

இது செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் அளவுகளால் அளவிடப்படுதாகும். 

❃வானிலை ஆய்வாளர்கள் வெப்பநிலையை அளக்க வெப்பமானி, ஸ்டீவன்சன் திரை வெப்பமானி, மற்றும் குறைந்தபட்ச - அதிகபட்ச வெப்பமானி மூலமும் கணக்கிடுகிறார்கள். 

❃சூரியக் கதிர்களிலிருந்து புவி பெறுகின்ற வெப்ப ஆற்றலானது வெளியேறுகின்ற புவி கதிர்வீசலால் இழக்கப்படுகிறது. 

❃வளிமண்டலம் புவிகதிர்வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் அதிக வெப்பமடைகிறது. 

❃ஆகையால் நாள்தோறும் அதிக பட்ச வெப்பநிலை பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் பதிவாகிறது. 

❃குறைந்த பட்ச வெப்பநிலை அதிகாலை 4.00 மணிமுதல் சூரிய உதயத்திற்கு முன் பதிவாகிறது.

2. காற்றையும் அதன் வகைகளைப் பற்றியும் விவரி.

கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு காற்று என்று பெயர். செங்குத்தாக நகரும் வாயுவிற்கு காற்றோட்டம் என்று பெயர். காற்று எப்பொழுதும் உயர் அழுத்தப்பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்த பகுதியை நோக்கி வீசும். காற்றால் உருவாக்கப்படும் சுழல் காற்று மற்றும் கடும் காற்றை உணரத்தான் முடியும் பார்க்க முடியாது. காற்று எத்திசையிலிருந்து வீசுகிறதோ அதே பெயரில் அழைக்கப்படுகிறது. 

காற்றின் அமைப்புகள் மூன்று பெரும் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை

கோள் காற்றுகள் அல்லது நிரந்தர காற்றுகள் 

ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர். எ.கா. வியாபாரக் காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று. 

பருவக் காற்றுகள் 

பருவக்காலக் காற்று என்பது பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும். இக்காற்றுகள் கோடைக்காலத்தில் கடலிலிருந்து நிலத்தை நோக்கியும், குளிர்காலத்தில் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். 

தலக் காற்றுகள் அல்லது பிரதேசக் காற்றுகள்

தலக்காற்றுகள் அல்லது பிரதேசக் காற்றுகள் என்பது ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறியபகுதியில் வீசும். எ.கா. நிலக்காற்று, கடல் காற்று.

3. வானிலைக் கூறுகளையும் அதை அளக்க உதவும் கருவிகளையும் பட்டியலிடுக.

வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம், வெப்பம், மேகமூட்டம், காற்றின்திசை, காற்றழுத்தம், ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் பிறகூறுகளின் தன்மைகளை குறிப்பதாகும். 



வானிலைக் கூறுகள்

அளவிட உதவும் கருவி

வெப்பம்

வெப்பநிலை மானி

மழைப்பொழிவு

மழைமானி

காற்றின் அழுத்தம்

காற்றழுத்தமானி

வளிமண்டல அழுத்த வேறுபாடு

காற்றழுத்தப் பதிவுத்தாள்

ஈரப்பதம்

ஈரநிலைமானி

காற்றின் வேகம்

பியோபோர்டு அளவை

காற்றின் திசை

காற்றுமானி



உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் ஏதேனும் 3 ஆலோசனைகளை அளிக்கவும்.

  1. மரங்களைப் பாதுகாத்தல், வளர்த்தல்

  2. நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல்

  3. புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் பயன்பாடுகளை அதிகரித்து, புதுப்பிக்க இயலாத எரிபொருள் பயன்பாடுகளைக் குறைத்தல்

Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்