வகுப்பு 8 ப1 பு4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் வினா-விடைகள்
அலகு -4
இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் …
மதிப்பீடு
I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. மக்கள் _____________ லிருந்து __________க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்.
அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
ஆ) நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு
இ) மலையிலிருந்து சமவெளிக்கு
ஈ) சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு
விடை: அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
2. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் ________________எனப்படுகிறது.
அ) குடிபுகுபவர் ஆ) அகதி
இ) குடியேறுபவர் ஈ) புகலிடம் தேடுபவர்
விடை: இ) குடியேறுபவர்
3. வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது _________.
அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
ஆ) கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
இ) நகரத்தில் இருந்து கிராமத்திற்கு
ஈ) நகரத்தில் இருந்து நகரத்திற்கு
விடை: அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
4. போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு __________ஐ சார்ந்தது.
அ) மக்களியல் ஆ) சமூக மற்றும் கலாச்சாரம்
இ) அரசியல் ஈ) பொருளாதாரம்
விடை: இ) அரசியல்
5. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் __________.
அ) மிகையான உணவு தானிய உற்பத்தி
ஆ) கால்நடை வளர்ப்பு
இ) மீன் பிடித்தல்
ஈ) வேட்டையாடுதல்
விடை: அ) மிகையான உணவு தானிய உற்பத்தி
II கோடிட்ட இடங்களை நிரப்புக
1. நகரமயமாதல் ______________எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
விடை: மூன்று
2. ____________என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்.
விடை: வேலைவாய்ப்பின்மை
3. இந்தியாவின் _____________மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.
விடை: புது டெல்லி
4. ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ______________இடம்பெயர்வு எனப்படும்.
விடை: தன்னார்வ
5. நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி ____________வளர்ச்சியால் அதிகரிக்கிறது.
விடை: மக்கள் தொகை
III பொருத்துக
IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக
1. குடிசைப்பகுதிகள் பொதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.
விடை: சரி
2. நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை.
விடை: சரி
3. நகரமயமாக்கம் குறுகியக் கால வரலாறுடையது.
விடை: தவறு
4. பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.
விடை: தவறு
5. மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது
விடை: சரி
V கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க
கூற்று: நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.
காரணம்: கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல.
அ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ. கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடை: அ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
VI சுருக்கமாக விடையளி
1. ‘இடம் பெயர்தல்’ – வரையறு.
ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தொலைவிற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும்.
2. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை?
மக்கள் ஊரகப் பகுதியிலிருந்து வளர்ந்து வரும் நகரம் மற்றும் மாநகரங்களுக்கு முக்கியமாக வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிக்காக இடம் பெயர்கிறார்கள்.
3. சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுக.
எரிமலை வெடிப்பு, நிலஅதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை இவ்வகை இடம் பெயர்வுக்கான முக்கிய காரணிகளாகும்.
4. இடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
குறைவான மக்கள் தொகை
அரசியல் பாதுகாப்பு
5. நகரமயமாக்கம் என்றால் என்ன?
நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை நகரமயமாதல் எனப்படுகிறது.
6. உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக.
1. டோக்கியோ (ஜப்பான்)
2. புது தில்லி (இந்தியா)
3. சாங்காய் ( சீனா)
4. மெக்சிகோ நகரம் (மெக்சிகோ)
5. சா பாலோ (பிரேசில்)
VII விரிவான விடையளி
1. இடம் பெயர்தலின் பல்வேறு வகைகள் யாவை? அவைகளை விளக்குக.
இடம் பெயர்வைப் பல வழிகளில் வகைப்படுத்தலாம். இவை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது.
I. நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்வுகள்
அ. உள்நாட்டு இடம் பெயர்வு
1. ஊரகத்திலிருந்து நகர்ப்புறம் ந�ோக்கி இடம் பெயர்தல்
2. நகரத்திலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயர்தல்
3. ஊரகத்தில் இருந்து ஊரகத்திற்கு இடம் பெயர்தல்
4. நகர்ப்புறத்திலிருந்து ஊரக பகுதிக்கு இடம் பெயர்தல்
ஆ. சர்வதேச இடம் பெயர்வு
II. இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்தல்
1. தன்னார்வ இடம் பெயர்வு
2. தன்னார்வமில்லா (அ) கட்டாய இடம் பெயர்வு
III. இடம் பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம் பெயர்தல்.
1. குறுகிய கால இடம் பெயர்வு
2. நீண்டகால இடம் பெயர்வு
3. பருவகால இடம் பெயர்வு
2. இடம் பெயர்தலுக்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்குக.
மக்கள் இடம் பெயர்தலுக்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவைகள் கீழ்க்காண் இரு தலைப்புகளில் வகைப்படுத்தப்படுகின்றன.
1. சாதகமான காரணிகள்
ஓர் இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் சாதக காரணிகள் அல்லது இழு காரணிகள் (Pull Factors) என அழைக்கப்படுகின்றன.
2. பாதகமான காரணிகள்
மக்களை தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறச் செய்யும் காரணிகள் உந்து காரணிகள் (Push Factors) அல்லது பாதகக் காரணிகள் என அழைக்கப்படுகின்றன.
3. நகரமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை ஆராய்க.
அ. குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதிகள்:
நகர்ப்புற பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பதால் குடியிருப்புகளுக்கான இடம் பற்றாக்குறை மற்றும் குறிப்பிடத்தக்க அளவு தரமற்ற குடியிருப்புகள் உருவாக காரணமாகின்றன.
ஆ. மக்கள் நெரிசல்
நகர்ப்புற பகுதிகளில் அதிக மக்கள் நெரிசல் சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலுக்கு வழி வகுக்கிறது. இது பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்குக் காரணமாகிறது.
இ. தண்ணீர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம்
உலகின் எந்த ஒரு நகரத்திலும் நாள் முழுவதுக்கும் தேவையான அளவிற்கு முறையாக நீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. கழிவுநீர் வடிகால் அமைப்பு மோசமான நிலையில் உள்ளது.
ஈ. போக்குவரத்து மற்றும் நெரிசல்
பல நகரங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போதுமான திட்டங்கள் இல்லாமை மற்றும் போதுமான போக்குவரத்து கட்டமைப்புகள் இல்லாமை.
உ. மாசடைதல்
சுற்றுச்சூழல் மாசடைவதற்கு நகரங்கள் மற்றும் மாநகரங்கள் முக்கியமான காரணிகளாகும். நகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தொழிலகங்களிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியன அருகில் உள்ள நீர் நிலைகளில் கலக்கின்றன.