வகுப்பு 6 ப1 அ1 வரலாறு என்றால் என்ன? வினா விடைகள்
அலகு 1
வரலாறு என்றால் என்ன?
பயிற்சிகள்
I . சரியான விடையைக் கண்டுபிடி….
1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்கமேற்கொண்ட நடவடிக்கை
அ. வணிகம்
ஆ. வேட்டையாடுதல்
இ. ஓவியம் வரைதல்
ஈ. விலங்குகளை வளர்த்தல்
விடை: ஆ. வேட்டையாடுதல்
II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
சரியான விடையைக் குறியிட்டுக் காட்டுக
1. கூற்று : பழைய கற்கால மனிதர்கள்வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்.
காரணம்: குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தின.
அ) கூற்று சரி, காரணம் தவறு.
ஆ) கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று தவறு, காரணமும் தவறு.
விடை: ஆ) கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி.
2. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் அகழாய்வுகள் மூலமாகத் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருள்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
அ) அருங்காட்சியகங்கள்
ஆ) புதைபொருள்படிமங்கள்
இ) கற்கருவிகள்
ஈ) எலும்புகள்
விடை: அ) அருங்காட்சியகங்கள்
3. தவறான இணையைக் கண்டுபிடி
அ) பழைய கற்காலம் - கற்கருவிகள்
ஆ) பாறை ஓவியங்கள் - குகைச் சுவர்கள்
இ) செப்புத் தகடுகள் - ஒரு வரலாற்று ஆதாரம்
ஈ) பூனைகள் - முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
விடை: ஈ) பூனைகள் - முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
4. மற்ற தொடர்களிலிருந்து வேறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
அ) பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
ஆ) வேட்டையாடுதலை குறிப்பதாக ஓவியங்கள் இருந்தன.
இ) பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதலை எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்
ஈ) பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
விடை: ஈ) பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
III. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் .
விடை: குகைகள்
2. வரலாற்றின் தந்தை .
விடை: ஹெரோடோஸ்
3. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு .
விடை: நாய்
4. கல்வெட்டுகள் ஆதாரங்கள் ஆகும்.
விடை: தொல்பொருள்
5. அசோகச் சக்கரத்தில் ஆரக்கால்கள் உள்ளன.
விடை: 24
IV. சரியா? தவறா?
1. பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.
விடை: சரி
2. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
விடை: சரி
3. அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது.
விடை: சரி
V. பொருத்துக
VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்கவும்
1. நாட்குறிப்பு எழுதுவதன் பயன்கள் இரண்டைக் கூறு.
மக்களின் அன்றாட வாழ்க்கை முறையையும், அவர்களது செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
2. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு அறிந்து கொள்கிறோம்?
கற்கருவிகள்
புதைபடிமங்கள்
பாறை ஓவியங்கள்
போன்றவற்றின் மூலமாக மக்களின் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு அறிந்து கொள்கிறோம்.
3. கல்வெட்டுகள் ஓர் எழுதப்பட்ட வரலாற்றுச்சான்றா?
ஆம், கல்வெட்டுகள் எழுதப்பட்ட தொல்பொருள் சான்று ஆகும்.
4. வரலாற்று தொடக்கக் காலம் (Proto History) என்றால் என்ன?
வரலாற்றுக்கும், வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம், வரலாற்று தொடக்கக் காலம் எனப்படும்.
5. ஏதேனும் ஒரு காப்பியத்தின் பெயரை எழுது.
சிலப்பதிகாரம்
VII. பின்வரும் வினாக்களுக்கு விடையளி
1. வரலாறு என்றால் என்ன?
வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு ஆகும்.
2. வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி எழுதுக.
வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது கற்கருவிகளை பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.
3. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் எவை?
தொல்லியல் அடையாளங்களான கற்கருவிகள், புதை படிமங்கள், பாறை ஓவியங்கள் போன்ற பலவற்றிலிருந்தும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.
4. வரலாற்றுக்கு முந்தைய காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் யாவை?
கோல்டிவா, மாகரா, சிரண்ட்,ஆதிச்ச நல்லூர்,அத்திரம்பாக்கம்,பிரம்மகிரி.
5. அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?
பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படும் இடமே அருங்காட்சியம் ஆகும்.
6. பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றைக் கூறு.
கற்கருவிகள், மரக்கிளைகள், விலங்குகளின் காெம்புகள் மற்றும் எலும்புகள் பாேன்றவற்றை கருவிகளைப் பழங்கால மனிதர்கள் வேட்டையாடப் பயன்படுத்தினர்.
7. பாறைகளில் ஓவியங்கள் ஏன் வரையப்பட்டன?
வேட்டைக்குப் போனவர்கள் அங்கு நடந்தது என்ன என்பதை, தங்களோடு வர இயலாதவர்களுக்குக் காட்டுவதற்காகப் பாறைகளிலும் குகைச்சுவர்களிலும் இப்படியான ஓவியங்களைத் தீட்டியிருக்கலாம். சில நேரங்களில் பொழுதுபோக்காகவும் தீட்டியிருக்கலாம்.
8. தொல் கைவினைப் பொருள்கள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
பொம்மைகள், அணிகலன்கள்.
XI. கட்டக வினாக்கள்