வகுப்பு 6 ப1 சஅ அ 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி வினா விடைகள்
அலகு 2
மனிதர்களின் பரிணாம வளர்ச்சி..…
பயிற்சிகள்
I . சரியான விடையைக் கண்டுபிடி….
1. பரிணாமத்தின் வழிமுறை _________________.
அ. நேரடியானது ஆ. மறைமுகமானது இ. படிப்படியானது ஈ. விரைவானது
விடை: அ. நேரடியானது
2. தான்சானியா _________________கண்டத்தில் உள்ளது.
அ. ஆசியா ஆ. ஆப்பிரிக்கா இ. அமெரிக்கா ஈ. ஐரோப்பா
விடை: ஆ. ஆப்பிரிக்கா
II. கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கூற்று : உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின்உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம் : தட்பவெப்ப நிலை மாற்றமே
அ. கூற்று சரி.
ஆ. காரணம் தவறு.
இ. கூற்றும் காரணமும் சரி.
ஈ. கூற்றும் காரணமும் தவறானவை.
விடை: இ. கூற்றும் காரணமும் சரி.
III. சரியான இணையைக் கண்டுபிடி
அ. ஆஸ்ட்ரலோபிதிகஸ் - இரு கால்களால் நடப்பது
ஆ. ஹோமோ ஹேபிலிஸ் - நிமிர்ந்து நின்ற மனிதன்
இ. ஹோமோ எரக்டஸ் - சிந்திக்கும் மனிதன்
ஈ. ஹோமோ சேப்பியன்ஸ் - முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது
விடை: அ. ஆஸ்ட்ரலோபிதிகஸ் - இரு கால்களால் நடப்பது
IV. கோடிட்ட இடங்களை நிரப்பவும்
1. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _________________ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள்.
விடை: மானுடவியலாளர்கள்
2. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள்_________________
வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
விடை: நாடோடி
3. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _________________ மற்றும் ஆகும்.
விடை: வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல்
4. _________________கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
விடை: கலப்பை
5. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _________________என்னுமிடத்தில் காணப்படுகின்றன.
விடை: பொறிவரை – கரிக்கையூர்
V. சரியா, தவறா?
1. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
விடை: தவறு
2. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
விடை: சரி
3. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
விடை: சரி
4. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
விடை: தவறு
VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளி
1. அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?
கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வு
2. தொடக்க கால மனிதர்கள் எதை அணிந்தார்கள்?
பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல்கள், மரப்பட்டைகள், இலைகள் ஆகியவற்றை ஆடைகளாக அணிந்தார்கள்.
3. தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?
மரம், குகை அல்லது மலையடிவாரத்தில் தங்கி வாழ்ந்தார்கள்.
4. நிலத்தை உழுவதற்கு எந்த விலங்கு பயன்படுத்தப்பட்டது?
எருதுகள்
5. மனிதர்கள் எப்போது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்?
விவசாயம் அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடியேறும்படி செய்தது.
VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி
1. பரிணாமம் என்றால் என்ன?
மனித இனம் மாற்றங்களை அடைந்து, ஒரு மேம்பட்ட நிலையை நோக்கி வளர்ச்சி பெறும் வழிமுறையைப் பரிணாமம் என்கிறோம்.
2. ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் இரு பண்புகளை எழுது.
சுயமாகச் சிந்திக்கும் மனிதன்
கரடு முரடான கருவிகளை பயன்படுத்தினான்.
3. மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்?
முன்னோர்கள் குழுக்களாக மரம், குகை அல்லது மலையடிவாரத்தில் தங்கினார்கள். தங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேட்டையாட ஆரம்பித்தனர். அவர்கள் உணவைத் தேடி நகர்ந்துகொண்டே இருந்தார்கள்.
4. பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.
குழுவாகச் சென்று வேட்டையாடுதல்.
குழி தோண்டி, அதில் விலங்குகளைச் சிக்க வைத்து வேட்டையாடுதல்
போன்ற முறைகளைப் பயன்படுத்தி வேட்டியாடினார்கள்.
கல்லிலும், எலும்பிலும் செய்தக் கருவிகளை வேட்டைக்குப் பயன்படுத்தினார்கள்.
5. கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?
முன்னோர்கள் கோடரிகளை மரம் வெட்டவும், மரக்கிளைகள நீக்கவும், குழிதோண்டவும், விலங்குகளை வேட்டையாடவும், விலங்குகளின் தோலை உரிக்கவும் பயன்படுத்தினார்கள்.
6. தொல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய்?
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பற்றிப் படிப்பது தொல்லியல் ஆகும்.
7. மானுடவியல் பற்றி நீ அறிந்துள்ளது என்ன?
மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி படிப்பது மானுடவியல் ஆகும்.மானுடவியல் ஆய்வாளர்கள், மனித குலத்தின் வளர்ச்சியையும், நடத்தையையும் ஆராய்கின்றனர்.
XI.கட்டக வினாக்கள்
______________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பானை செய்வதை எளிதாக்கியது.
விடை : சக்கரம்
பண்டப்பரிமாற்ற முறை என்பது _______________ ஆகும்
விடை : பொருட்களின் பரிமாற்றம்
தொடக்க கால மனிதர்கள் வேட்டைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களின் இரண்டைக் கூறு
விடை : கற்கருவிகள், எலும்புகள், மரக்கிளைகள்.
ஆயுதம் செய்வதற்கு ஏற்ற கல் எது?
விடை : சிக்கி-முக்கி கல்
நகரங்களும், பெரு நகரங்களும் _______________ மற்றும் _______________ ஆகியவற்றால் தோன்றின.
விடை : வர்த்தகம் மற்றும் வணிகம்
மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எது
விடை : சக்கரம்
பாறை ஓவியங்களில் உள்ள உருவகங்களை அடையாளம் காணவும்
விடை : படத்தைப்பார்த்து அடையாளம் காணவும்.
தாெடக்க கால மனிதர்களின் முதன்மையான தொழில் எது?
விடை : வேட்டையாடுதல்
குகை ஓவியங்கள் மூலம் நாம் என்ன அறிந்து காெள்கிறாேம்?
விடை : அன்றாட நிகழ்வுகள்.
தாெடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?
விடை : குகைகள்
_______________ தொல்லியல் துறையுடன் தொடர்புடையது
விடை : அகழ்வாராய்ச்சி
தாெடக்க கால மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளில் இரண்டைக் குறிப்பிடு.
விடை : நாய், காளை.