வகுப்பு - 8 அறிவியல் இரண்டாம் பருவ பாடங்களின் ஒரு மதிப்பெண் வினா விடைகள்

 

வகுப்பு - 8

அறிவியல் 

இரண்டாம் பருவ பாடங்களின் ஒரு மதிப்பெண் வினா விடைகள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

விடை: அ) எதிர் மின்னூட்டம்

2. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?

விடை: இ) எலக்ட்ரான்கள்

3. ஒரு எளிய மின்சுற்றைஅமைக்கத் தேவையான மின் விடை: ஈ) மின்கலம், மின் கம்பி, சாவி

4. ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலை மின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?

விடை: ஆ) நேர் மின்னூட்டம்

5. மின் உருகி என்பது ஒரு

விடை: ஈ) மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி

1. ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன?

விடை: ஆ) உலோகங்கள்

2. பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை?

i) அதிர்வெண் ii) கால அளவு iii) சுருதி iv) உரப்பு

அ) i மற்றும் ii 

ஆ) ii மற்றும் iii

இ) (iii) மற்றும் (iv) 

ஈ) (i) மற்றும் (iv)

விடை: இ) (iii) மற்றும் (iv) 

3. ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது

விடை: இ) உரப்பு

4. சித்தார் எந்த வகையான இசைக்கருவி?

விடை: அ) கம்பிக் கருவி

5. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.

அ) ஹார்மோனியம் 

ஆ) புல்லாங்குழல்

இ) நாதஸ்வரம்

ஈ) வயலின்

விடை: ஈ) வயலின்

6. இரைச்சலை ஏற்படுத்துவது

விடை: ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்


7. மனித காதுக்குக் கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு

விடை: இ) 20 Hz முதல் 20,000 Hz வரை

8. ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரிக்கும்போது, பின்வருவனவற்றுள் எது உண்மையாக இருக்கும்?

விடை: அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.

9. இரைச்சலால் ஏற்படுவது எது?

அ) எரிச்சல் 

ஆ) மன அழுத்தம்

இ) பதட்டம் 

ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்


1. கேதோடு கதிர்கள் _______________ ஆல் உருவாக்கப்பட்டவை.

விடை: இ. எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்

2. கார்பன் டைஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும்

விடை: ஆ. மாறா விகித விதி

3. நீரில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __________ நிறை விகிதத்தில்

இணைந்துள்ளன.

விடை: அ. 1 : 8 

4. டால்டனின் கூற்றுக்களுள் எந்தக்கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?

விடை: இ. தனிமங்கள் அணுக்களால் ஆனவை.

5. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்

விடை: இ. ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.


1. எந்த வெப்பநிலையில் நீர் பனிக்கட்டியாக மாற்றமடையும்?

விடை: அ) 0º

2. நீரில் கார்பன் டை ஆக்சைடின் கரைதிறன் அதிகமாவது

விடை:ஆ) அதிகமான அழுத்தத்தில்

3. நீரினை மின்னாற்பகுக்கும்போது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு

விடை: ஆ) ஹைட்ரஜன்

4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது நீரை மாசுபடுத்தும்?

விடை: அ) ஈயம் 

5. நீரின் நிரந்திர கடினத்தன்மைக்குக் காரணமாக இருப்பவை

விடை: அ) சல்பேட்டுகள் 

1. அமிலங்கள் ________ சுவையை உடையவை.

விடை: அ) புளிப்பு 

2. கீழ்க்காண்பவற்றுள் நீர்க் கரைசலில் மின்சாரத்தைக் கடத்துவது ______________.

விடை:இ) அமிலம் மற்றும் காரம்

3. நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் ______________ நிறமாக மாறுகிறது.

விடை:இ) சிவப்பு 

4. காரத்தை நீரில் கரைக்கும்போது அது ______________ அயனிகளைத் தருகிறது.

விடை:அ) OH-

5. சோடியம் ஹைட்ராக்சைடு ஒரு ____________ ஆகும்.

விடை:ஆ) காரம்

6. சிவப்பு எறும்பின் கொடுக்கில் ___________அமிலம் உள்ளது.

விடை:ஈ) ஃபார்மிக் அமிலம்

7. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு ___________ ஐ குணப்படுத்தப் பயன்படுகிறது.

விடை: அ) அமிலத்தன்மை

8. அமிலமும் காரமும் சேர்ந்து ___________ உருவாகிறது

விடை: அ) உப்பு மற்றும் நீர்

9. நாம் பல் துலக்குவதற்கு பற்பசையைப் பயன்படுத்துகிறோம் ஏனெனில் அது ________ தன்மை கொண்டது.

விடை: அ) காரம்

10. மஞ்சள் தூள் நிறங்காட்டியானது கார கரைசலில் மஞ்சள் நிறத்திலிருந்து __________ நிறமாக மாறுகிறது.

விடை:ஈ) சிவப்பு


1. நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?

 (i) எலும்புகள்    (ii) தோல் (iii) தசைகள்   (iv) உறுப்புகள்

கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க.

அ) (i) மற்றும் (iii) 

ஆ) (ii) மற்றும் (iv)

இ) (i) மற்றும் (iv) 

ஈ) (iii) மற்றும் (ii)

விடை: அ) (i) மற்றும் (iii) 

2. பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?

விடை: ஆ) நத்தை

3. _________ மூட்டுகள் அசையாதவை.

விடை: இ)  மேல் தாடை மற்றும் மண்டை ஓடு

4. நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?

விடை: அ) தண்ணீரில் எளிதாக நீந்த

5. உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா) தாங்குவது எது?

விடை: ஆ) குருத்தெலும்பு

6. கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது?

விடை: அ) கால் 

7. முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?

விடை: அ)  கழுத்தெலும்பு -7 

8. ________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை.

விடை: இ) தசை 


1. _____________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம்பருவம் எனப்படும்.

விடை:இ) 11 முதல்19

2. உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் ____________________ என்று அழைக்கப்படுகிறது.

விடை: அ) பருவமடைதல்

3. பருவமடைதலின்போது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதி ஆனது _________ ல் அகன்று

விடை:ஆ) பெண்கள்

4. ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியைக் குறிக்கிறது.

விடை: இ) குரல்வளை

5. வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _____ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.


விடை: இ) வியர்வை மற்றும் எண்ணெய்

6. விந்து செல்லானது _____________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது

விடை: ஈ) விந்தகங்கள்

7. நாளமில்லாசுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் __________ எனப்படும்.

விடை: அ) ஹார்மோன்கள்

8. ஆன்ட்ரோஜன் உற்பத்தி __________ ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

விடை: ஆ) LH ஹார்மோன்

9. மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு __________.

விடை:இ) நின்று விடுகிறது

10. நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க __________ எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

விடை: ஈ) கால்சியம்



கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. பொருட்களை ஒன்றுடனொன்று தேய்க்கும் போது _______ நடைபெறுகிறது.

விடை: உராய்வு

2. ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து _______ ஆகிறது.

விடை: நேர்மின் முனை

3. மின்னல் தாக்குதலில் இருந்து கட்டடங்களைப் பாதுகாக்கும் சாதனம் _______

விடை: மின்னல் கடத்தி

4. அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும்போது அவை பாதிக்கப்படாமல் இருக்க _______ அவற்றுடன் இணைக்கப்ப டுகின்றன.

விடை:  மின் உருகி

5. மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன்  இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று _______ எனப்படும்.

விடை: தொடர் இணைப்புச்சுற்று

1. ஒலி ____________ ஆல் உருவாக்கப்படுகிறது.

விடை: அதிர்வுகள்

2. தனி ஊசலின் அதிர்வுகள் ________________ என்றும் அழைக்கப்படுகின்றன.

விடை: குறுக்கலை

3. ஒலி ______________ வடிவத்தில் பயணிக்கிறது.

விடை: இயந்திர அலை

4. உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் கொண்ட ஒலிகள் ____________  எனப்படுகின்றன.

விடை: மீயொலி

5. ஒலியின் சுருதி அதிர்வுகளின் _______________ ஐச் சார்ந்தது.

விடை: எண்ணிக்கை

6. அதிர்வுறும் கம்பியின் தடிமன் அதிகரித்தால், அதன் சுருதி ______________ .

விடை: குறையும்.


1. _____________ என்பது ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள்.

விடை: அணு

2. ஒரு தனிமமானது _________________ மாதிரியான அணுக்களால் உருவாக்கப்பட்டது.

விடை: ஒரே

3. ஒரு அணுவானது ______________,______________ மற்றும் _____________ஆகிய துகள்களால் ஆனது.

விடை: புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான்

4. எதிர்மின்சுமை கொண்ட அயனி ____________ எனப்படும், நேர் மின்சுமை கொண்ட அயனி ___________ எனப்படும்.

விடை: எதிரயனை, நேரயனி

5. ____________ (எலக்ட்ரான் / புரோட்டான்) ஒரு எதிர்மின்சுமை கொண்ட துகள்.

விடை: எலக்ட்ரான்

6. புரோட்டான்கள் ______________ (நேர் / எதிர்) மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி

விலக்கமடைகின்றன.

விடை: எதிர்


1. நீர் நிறமற்றது, மணமற்றது மற்றும் __________

விடை:சுவையற்றது

2. நீரின் கொதிநிலை __________

விடை: 100º

3. நீரின் தற்காலிகக் கடினத்தன்மை __________ முறையில் நீக்கப்படுகிறது.

விடை:கொதிக்கவைத்தல்

4. நீர் _________________ வெப்பநிலையில் அதிக அடர்த்தியினைப் பெற்றிருக்கும்.

விடை: 4ºC

5. ஏற்றம் ________ செயல்பாட்டைத் துரிதப்படுத்தும்.

விடை:

1. பென்சாயிக் அமிலம் __________ ஆக பயன்படுகிறது.

விடை: உணவு பதப்படுத்தி

2. ’புளிப்புச் சுவை’ என்பது இலத்தின் மொழியில் __________ என்ற சொல்லால் வழங்கப்படுகிறது.

விடை: அசிடஸ்

3. காரங்கள் ________ சுவையைக் கொண்டவை.

விடை: கசப்பு

4. கால்சியம் ஆக்சைடின் வேதிவாய்ப்பாடு __________

விடை: CaO

5. குளவியின் கொடுக்கில் __________ அமிலம் உள்ளது.

விடை: ஃபார்மிக்

6. உணவு தயாரிக்கப் பயன்படும் மஞ்சளானது __________ ஆக பயன்படுகிறது.

விடை: நிறங்காட்டி

7. செம்பருத்தி பூ நிறங்காட்டி அமிலக்கரைசலில் __________ நிறத்தைத் தருகிறது.

விடை: இளஞ்சிவப்பு


1. உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது _________ எனப்படும்.

விடை: இடம் பெயர்தல் 

2. _________ என்பது ஒரு உயிரினத்தின் உடல் பகுதியின் நிலையிலுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.

விடை: இயக்கம்

3. உடலுக்கு வலிமையான கட்டமைப்பை வழங்கும் அமைப்பு _________ எனப்படும்.

விடை: எலும்பு மண்டலம்

4. மனிதனின் அச்சு எலும்புக்கூடு _________, _________, _________ மற்றும் ________ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விடை: மண்டை ஓடு, முக எலும்புகள், ஸ்டெர்னம் (மார்பக எலும்பு), மற்றும் முதுகெலும்புத் தொடர்

5. மனிதனின் இணைப்பு எலும்புக்கூடு _________ மற்றும் _________ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விடை:  தோள்பட்டை எலும்பு, கை, இடுப்பு எலும்பு

 6. இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் _________ என அழைக்கப்படுகிறது.

விடை: மூட்டு

7. அசையாத மூட்டு _________ காணப்படும்.

விடை: மண்டை ஓட்டில்

8. இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தோல் போன்ற உடலின் மென்மையான பாகங்களுடன் _________ இணைக்கப்பட்டுள்ளது.

விடை: வரியற்ற தசை

9. _______________ தசை கண்பாவையை அகலமாக்குகிறது.

விடை: ரேடியல்


1. பெண்களில் அண்டகத்தால் _____________ உற்பத்தி செய்யப்படுகிறது.

விடை: ஈஸ்ட்ரோஜன்

2. இனப்பெருக்க உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் ________  கட்டுப்படுத்தப்படுகின்றன.

விடை: பிட்யூட்டரியின் முன் கதுப்பினால்

3. பாலூட்டுதலின்போது பால் உற்பத்தியானது ________ ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.

விடை: ப்ரோலாக்டின்

4. ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைந்து _______________ ஐ உருவாக்குகின்றன.

விடை: கருவுற்ற முட்டை

5. பருவமடைதலின் போது ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சி ____________ என்று அழைக்கப்படுகிறது.

விடை: பூப்படைதல்

6. பொதுவாக அண்டம் விடுபட்ட 14 நாட்களுக்குப் பின் _____________ ஏற்படுகிறது.

விடை: மாதவிடாய்

7. _____________ என்பது புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் உயிர்ச்சத்துக்களை குறிப்பிட்ட அளவில் உள்ளடக்கியதாகும்.

விடை: சரிவிகித உணவு

8. தைராய்டு சுரப்பி தொடர்புடைய நோய்களைத் தடுப்பதில் _____________ உதவுகிறது.

விடை: அயோடின்

9. இரும்புச் சத்துப் பற்றாக்குறை _________க்கு வழிவகுக்கிறது.

விடை: இரத்தசோகை

10. பெண்களில் கருவுறுதல் _____________  நிகழ்கிறது.

விடை: ஃபெலோப்பியன் நாளத்தில்



சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக. 


1. எபோனைட் தண்டினை கம்பளித் துணி ஒன்றுடன் தேய்க்கும்போது எபோனைட் தண்டு எதிர் மின்னூட்டங்களைப் பெற்றுக்கொள்கிறது.

விடை: சரி

2. மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகேகொண்டு செல்லும்போது மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு எதிரான மின்னூட்டம் அதில் தூண்டப்படும்.

விடை: தவறு. மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு அருகில் இருக்கும் முனையில் அதற்கு எதிரான மின்னூட்டமும் மறு முனையில் ஒத்த மின்னூட்டமும் தூண்டப்படுகின்றன.

3. தூண்டல் முறையில் மின்னேற்றம் செய்யப் பயன்படும் ஒரு கருவி நிலைமின்காட்டி.

விடை: தவறு. நிலைமின்காட்டி பொருளொன் றில் மின்னூட்டம் இருப்பதைக் கண்டறியப் பயன்படும் கருவியாகும்.

4. நீர் மின்சாரத்தைக் கடத்தும்.

விடை: சரி

5. பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மின்னோட்டம் மாறிலியாக இருக்கும்.

விடை: தவறு.  பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மின்னழுத்தம் மாறிலியாக இருக்கும்.


1. கழிவுநீரினை நன்கு சுத்திகரித்த பிறகே நன்னீர் நிலைகளில் கலக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

விடை: சரி

2. கடல் நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் அதனை விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம்.

விடை: தவறு. 

கடல் நீரில் உள்ள உப்புகள் விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாது. அவற்றில் அதிகமாக சோடியம் குளோரைடு உப்பு மட்டுமே இருக்கும்.

3. வேதிஉரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண்ணின் தரம் குறைந்து

நீர் மாசுபடுகிது.

விடை: சரி

4. நீரின் அடர்த்தியானது அனைத்து வெப்பநிலையிலும் மாறாமல் இருக்கும்.

விடை: தவறு.

வெவ்வேறு வெப்ப நிலைகளில் நீர் வெவ்வேறு அடர்த்தியைக் கொண்டிருக்கும்.

5. கடின நீரில் சோப்பு நன்கு நுரையினைத் தரும்.

விடை:தவறு.

மென் நீரில் சோப்பு நன்கு நுரையினைத் தரும்.


1. பெரும்பாலான அமிலங்கள் நீரில் கரைவதில்லை.

விடை: தவறு

பெரும்பாலான அமிலங்கள் நீரில் கரையும்.

2. அமிலங்கள் கசப்புச்சுவை உடையவை.

விடை: தவறு

அமிலங்கள் புளிப்புச்சுவை உடையவை.

3. உலர்ந்த நிலையில் உள்ள காரங்களைத் தொடும்போது அவை  வழவழப்புத் தன்மையுடன் காணப்படும்.

விடை:தவறு

காரங்கள் திரவத்தில் கரைந்துள்ள போது வழவழப்புடன் காணப்படுகின்றன.

4. அமிலங்கள் அரிக்கும் தன்மையைக் கொண்டவை.

விடை:சரி

5. அனைத்துக் காரங்களும் அல்கலிகள் ஆகும். 

விடை: தவறு

அனைத்துக் காரங்களும் அல்கலிகள் அல்ல.நீரில் கரையும் காரங்கள் அல்கலிகள் ஆகும். 

6. செம்பருத்திப்பூ சாறு ஒரு இயற்கை நிறங்காட்டி ஆகும்.

விடை: சரி


1. மனிதர்களின் மண்டை ஓடு 22 எலும்புகளைக்கொண்டுள்ளது.

விடை: சரி

2. மனித முதுகுத்தண்டில் 30 முதுகெலும்புகள் உள்ளன.

விடை: தவறு.

மனித முதுகுத்தண்டில் 27 முதுகெலும்புகள் உள்ளன.

3. மனித உடலில் 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.

விடை: சரி

4. இடுப்பு என்பது அச்சு எலும்புக்கூட்டின் ஒரு பகுதியாகும். 

விடை: தவறு.

இடுப்பு என்பது இணையுறுப்பு எலும்புக்கூட்டின் ஒரு பகுதியாகும்.

5. கீல் மூட்டு சற்று நகரக்கூடிய மூட்டு.

விடை: தவறு.

கீல் மூட்டு ஒரே திசையில் மட்டும் செயல்படக் கூடிய மூட்டு ஆகும்.

6. இதயத் தசை ஒரு இயக்கு தசை.

விடை: தவறு.

இதயத் தசை தன்னிச்சையற்ற இயங்கு தசை.

7. கையில் காணப்படும் வளைதசைகளும் நீள்தசைகளும் எதிரெதிர் தசைகளாகும்

விடை: சரி


1. ஆண்கள் மற்றும் பெண்களில் பருவமடைதலின் போது, திடீரென உயரம் அதிகரிக்கின்றது.

விடை: சரி

2. கருப்பையிலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.

விடை: தவறு. அண்டகத்திலிருந்து அண்டம் வெளியேறுதல், அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.

3. கர்ப்பத்தின் போது, கார்பஸ்லூட்டியம் தொடர்ந்து வளர்ந்து அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது. 

விடை:சரி

4. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நோய்த் தொற்றிற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது.

விடை: தவறு

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது

டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நோய்த்தொற்றிற்கான வாய்ப்பை குறைக்கின்றது.

5. சுத்தமான கழிவறைகளை மலம் கழிக்கப்பயன்படுத்துதல் ஒரு நல்ல பழக்கமாகும்.

விடை: சரி



பொருத்துக. 

விடை:


இரு ஓரின மின்துகள்கள்-ஒன்றை விட்டு ஒன்று விலக்கும் 

இரு வேறின மின்துகள்கள்-ஒன்றை ஒன்று கவரும்

கண்ணாடித் துண்டை பட்டுத்துணியில் தேய்க்கும்போது-நேர்மின்னூட்டம் பெறும்

ரப்பர் தண்டை கம்பளியில் தேய்க்கும் போது -எதிர் மின்னூட்டம் பெறும்

மின் உருகி- மின்சுற்று அதிக சூடாகாமல் பாதுகாக்கும். 



மீயொலி

அதிர்வெண் 20,000 Hz க்கு மேல் உள்ள ஒலி

காற்றில் ஒலியின் வேகம்

331 ms-1  

இன்ஃப்ராசோனிக்ஸ்

அதிர்வெண் 20 Hz க்குக் கீழ் உள்ள ஒலி

ஒலி

ஊடகம் தேவை 



பொருண்மை அழியா விதி

லவாய்சியர் 

மாறா விகித விதி

ஜோசப் ப்ரெளஸ்ட் 

கேதோடு கதிர்கள்

சர் வில்லியம் குரூக்ஸ்

ஆனோடு கதிர்கள்

கோல்ட்ஸ்டீன் 

நியூட்ரான்

ஜேம்ஸ் சாட்விக் 



சர்வ கரைப்பான்

நீர் 

கடினநீர்

வயிற்று உபாதைகள்

கொதித்தல் 

கிருமிகளைக் கொல்லுதல் 

நுண்ணுயிர் நீக்கம்

ஓசோனேற்றம்

கழிவுநீர்

நீர் மாசுபடுத்தி



பருவமடைதல்

பாலின முதிர்ச்சி 

ஆடம்ஸ் ஆப்பிள் 

குரல் மாற்றம் 

ஆண்ட்ரோஜன்

தசை உருவாக்கம் 

ICSH

டெஸ்ட்டோஸ்டீரான்

மாதவிடைவு

45 முதல் 50 வயது



Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்