8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்
ஒலியியல் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன? அ) காற்று ஆ) உலோகங்கள் இ) வெற்றிடம் ஈ) திரவங்கள் விடை: ஆ) உலோகங்கள் 2. பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை? i) அதிர்வெண் ii) கால அளவு iii) சுருதி iv) உரப்பு அ) i மற்றும் ii ஆ) ii மற்றும் iii இ) (iii) மற்றும் (iv) ஈ) (i) மற்றும் (iv) விடை: அ) i மற்றும் ii 3. ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது அ) வேகம் ஆ) சுருதி இ) உரப்பு ஈ) அதிர்வெண் விடை: இ) உரப்பு 4. சித்தார் எந்த வகையான இசைக்கருவி? அ) கம்பிக் கருவி ஆ) தாள வாத்தியம் இ) காற்றுக் கருவி ஈ) இவை எதுவும் இல்லை விடை: அ) கம்பிக் கருவி 5. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி. அ) ஹார்மோனியம் ஆ) புல்லாங்குழல் இ) நாதஸ்வரம் ஈ) வயலின் விடை: ஈ) வயலின் 6. இரைச்சலை ஏற்படுத்துவது அ) அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள் ஆ) வழக்கமான அதிர்வுகள் இ) ஒழுங்கான மற்றும் சீரான அதிர்வுகள் ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள் விடை: ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள் 7. மனித காதுக்குக...