வகுப்பு 6 அறிவியல் ப3 நீர் பாடப்புத்தக வினா-விடைகள்
அலகு 2 நீர் மதிப்பீடு I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1. உலகில் உள்ள மொத்த நீரில் 97% ஆகும். அ. நன்னீர் ஆ. தூயநீர் இ. உப்பு நீர் ஈ. மாசடைந்த நீர் விடை: இ. உப்பு நீர் 2. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல? அ. ஆவியாதல் ஆ. ஆவி சுருங்குதல் இ. மழை பொழிதல் ஈ. காய்ச்சி வடித்தல் விடை: ஈ. காய்ச்சி வடித்தல் 3. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது? I. நீராவிப்போக்கு II. மழைபொழிதல் III. ஆவி சுருங்குதல் IV. ஆவியாதல் அ. II மற்றும் III ஆ. II மற்றும் IV இ. I மற்றும் IV ஈ. I மற்றும் II விடை: இ. I மற்றும் IV 4. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது? அ. பனி ஆறுகள் ஆ. நிலத்தடி நீர் இ. மற்ற நீர் ஆதாரங்கள் ஈ. மேற்பரப்பு நீர விடை: ஆ. நிலத்தடி நீர் 5. வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் .. அ. வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம். ஆ. அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம். இ. வெளியேறிய நீர...