காந்தவியல் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரப்படும் பொருள் __________ அ) மரப்பொருள்கள் ஆ) ஏதேனும் ஓர் உலோகம் இ) தாமிரம் ஈ) இரும்பு மற்றும் எஃகு விடை: ஈ) இரும்பு மற்றும் எஃகு 2. கீழ்க்கானும் ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும். அ) மின்காந்தம் ஆ) முமெட்டல் இ) தேனிரும்பு ஈ) நியோடிமியம் விடை: ஈ) நியோடிமியம் 3. ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும் _________ அ) ஒன்றையொன்று கவரும் ஆ) ஒன்றையொன்று விலக்கும் இ) ஒன்றையொன்று கவரவோ,விலக்கவோ செய்யாது ஈ) மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை விடை: அ) ஒன்றையொன்று கவரும் 4. கற்பனையான புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது? அ) U வடிவ காந்தம் ஆ) மின்னோட்டத்தைக் கடத்தும் நேர்க்கடத்தி இ) வரிசுருள் ஈ) சட்டக்காந்தம் விடை: ஈ) சட்டக்காந்தம் 5. MRI என்பதன் விரிவாக்கம் __________ அ) Magnetic Resonance Imaging ஆ) Magnetic Running Image இ) Magnetic Radio Imaging ஈ) Magnetic Radar Imaging விடை: அ) Magnetic Resonance Imaging 6. காந்த ஊசி _____...